புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2015

வலுவான ஃபிராங்கினால் கடும் பாதிப்புக்குள்ளான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறை!



சுவிட்ஸர்லாந்து ஃபிராங்கின் வலுவான மதிப்பால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளதாக மத்திய சுங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
மத்திய சுங்க நிர்வாகம் (Federal Customs Administration (FCA)) வியாழக் கிழமையன்று இதனை தெரிவித்துள்ளது.
மத்திய சுங்க நிர்வாகம் வெளியிட்ட செய்தியில், கடந்த ஏப்ரல் மாதத்தின் ஏற்றுமதிகள் கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் இருந்த நிலையை விட, 5.1 சதவிகிதம் குறைந்து 16.29 பில்லியன் பிராங்குகள் அளவிற்கு குறைந்துள்ளது.
யூரோவின் மதிப்புக்கு எதிராக சுவிஸ் ஃபிராங்கின் மதிப்பு கடந்த சனவரி மாதம் உயர்த்தப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளை சமாளிக்க, நிறுவனங்கள் விலைகளை குறைத்ததால் விற்பனையில் சரிவு ஏற்பட்டதாக ஏற்றுமதியாளர்களில் முக்கால்வாசிப் பேர் தெரிவித்துள்ளனர்.
ஏற்றுமதியை பொறுத்தவரையில் மருந்து மற்றும் ரசாயன தொழிற்சாலைகள் (Pharmaceutical and Chemical industries) மிகப்பெரிய வீழ்ச்சி (கிட்டத்தட்ட 13 சதவிகிதம்) அடைந்துள்ளது.
அதற்கு அடுத்தபடியாக பிளாஸ்டிக் துறையில் (Plastics sector) 11.2 சதவிகிதம் அளவிற்கும், உணவு, மதுவகைகள் மற்றும் புகையிலை துறையில் (Food, Drinks and Tobacco sector) 8.2 சதவிகிதம் அளவிற்கு சரிவு ஏற்பட்டுள்ளது.
இயந்திரங்கள் மற்றும் மின்னணு துறைகளில் (Machinery and Electronics) 2.2 சதவிகிதம் அளவிற்கு மிதமான வீழ்ச்சியே ஏற்பட்டிருப்பதோடு, கைக்கடிகாரம் தயாரிக்கும் துறையில்  (Watchmaking Sector) வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் வீழ்ச்சி 0.8 சதவிகிதமாக உள்ளது.
ஆனால் அதே நேரத்தில், நகை ஏற்றுமதி 33 சதவிகிதம் உயர்ந்துள்ளதோடு, ஜவுளி ஏற்றுமதி 2.6 சதவிகிதமும், நுட்ப அளவீட்டுக் கருவிகள் (Precision instruments) ஏற்றுமதி 1.1 சதவிகிதம் ஏற்றமடைந்துள்ளது.
வலுவான ஃபிராங்கினால் இறக்குமதியின் மதிப்பு வலுவாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, 8.1 சதவிகிதம் (13.43 பில்லியன் ஃபிராங்க்) அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும், யூரோ பகுதியில் உள்ள சுவிஸின் முக்கிய வியாபார பங்காளிகளுடன், வணிகம் தீவிரமாக மோசமாகிவிட்டதாக மத்திய சுங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ad

ad