புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2015

வடக்கு-கிழக்குப் பகுதியில் தேர்தல் தொகுதிகள் மாறா -அமைச்சர் திகாம்பரம்


வடக்கு கிழக்கில் தற்போது தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கக் கூடாது என்ற கோரிக்கைக்கு,
பிரதான கட்சிகள் இணங்கியுள்ளதாக தேர்தல் முறைமை மாற்றியமைப்பது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் உறுப்பினர் பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
 
தேர்தல் முறைமையை மாற்றியமைக்கும் 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில், சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் முன்வைத்துள்ள யோசனை குறித்து ஆராய்வதற்கு அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டது. 
 
இந்தக் குழு கடந்த வியாழக்கிழமை இரவு கூடி ஆராய்ந்தது. இதன் போதே மேற்படி இணக்கம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
புதிய தேர்தல் முறைப்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 இல் இருந்து 255 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன், தொகுதி மூலம் நேரடியாகவும், விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை மூலம் மாவட்ட அடிப்படையிலும், தேசியப் பட்டியல் மூலமும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
 
உத்தேச திருத்தச் சட்டத்தின் மூலம், தொகுதிகள் மீள்நிர்ணயம் செய்யப்படும் போது, வடக்கு - கிழக்கில், தொகுதிகள் மற்றும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 
 
போரினால் இலட்சக்கணக்கான வாக்காளர்கள் இடம்பெயர்ந்துள்ளதால், ஏற்கனவே இருக்கும் பல தொகுதிகள் இல்லாமல் போகும்.
 
இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் சுட்டிக்காட்டி, வடக்கு கிழக்கில் தேர்தல் தொகுதிகளை மீள நிர்ணயம் செய்வதை 10 ஆண்டுகளுக்கு பிற்போட வேண்டும் என்ற கோரியிருந்தன. இந்தக் கோரிக்கையை, பிரதான கட்சிகள் ஏற்றுக் கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
 
இதேவேளை, இந்தக் குழுவின் தலைவர் அமைச்சர் சரத் அமுனுகம கருத்துத் தெரிவிக்கையில், தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் சிறு கட்சிகள் அடங்கலான நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
சிறு கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்பு ஏற்படாத, சகல தரப்பும் இணங்கக் கூடிய புதிய கலப்பு தேர்தல் முறையயான்றை உருவாக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
 
நாளை திங்கட்கிழமை நடைபெறும் முக்கிய கூட்டத்தில் இறுதி முடிவு எட்ட எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

ad

ad