புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2015

இவளும் ஒரு பெண்ணா? எலும்புதுண்டுக்கு வாலாட்டும் இழி சிந்தையோடு பேச எப்படி முடிகிறது இவர் போன்றோரால் ?

சே! இவரும் ஒரு பெண்ணா? அதிலும் தமிழ் பெண







 இவளும் ஒரு பெண்ணா? எலும்புதுண்டுக்கு வாலாட்டும் இழி சிந்தையோடு பேச எப்படி முடிகிறது இவர் போன்றோரால் ?

எம் மக்கள் எம் மண்ணில் இராணுவத்தோடு தான் வாழ வேண்டுமாம்! எங்கள் மண்ணில் தமிழர்கள் நிலங்களை அபகரித்து ஆக்கிரமித்து இருக்கும் தமிழர்களை படுகொலை செய்த சிங்கள கொலை வெறி இராணுவத்தை வெளியேற்ற வேண்டியதில்லையாம்.
என்னே ஒரு அரக்க சிந்தனை! ஒரு பெண்ணாக இருந்து கொண்டு சற்றும் மனசாட்சி இன்றி இப்படி சொல்ல எப்படி முடிகிறது?
அரசின் சார்பில் திமிராக பேசியுள்ள மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ரஞ்சினி அவர்களே உங்களுக்கு வேண்டுமானால் இராணுவ சுற்றி வளைப்பு ஆசையாக இருந்தால் உங்கள் வீட்டை சுற்றி இராணுவத்தினரை குவிக்க சொல்லி பணித்து மகிழுங்கள். ...எம் மக்களின் இயல்பு வாழ்வை பறிக்கும் இராணுவ ஆக்கிரமிப்பு உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
எந்த ஒரு நாட்டிலும் போர்க் காலத்தில் மட்டுமே இராணுவம் ஊருக்குள் வருவது உண்டு. எங்கள் மண்ணில் போர் ஓய்ந்து விட்டது என்கின்றார்கள் இராணுவத்தை குவித்தபடியே. இது அரச வன்முறை. உடன் இதற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வலிமையாக எழ வேண்டும்.
செந்தமிழினி பிரபாகரன்-ன் படம்.
மக்கள் வாழும் பகுதியில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்ற முடியாது என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை அரசை திருப்தி படுத்த கூறும் இந்த வார்த்தைகள் எத்தனை தமிழ் மக்கள் கண்ணீரை வாழ்வாக்கி அச்சத்தை வாழ்வின் கணங்கலாக்கிக் கொடுக்கும் என்பதை இவர் போன்றோர் அறிவார்களா? என்னே ஒரு வக்கிர சிந்தை!
."தற்போது விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பெரும்பாலும் பெண் தலைமைத்துவ குடும்பங்களே உள்ளனர் இந் நிலையில் அப் பகுதிகளில் இராணுவத்தினரது முகாம்கள் அதிகளவில் இருப்பதால் அக் குடும்பங்கள் அச்சமின்றி குடியமர முடியுமா?" என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இந்த பெண்மணி (?) சற்றும் இரக்கம் இன்றி இதனை தெரிவித்தார்.
"இராணுவத்தினரை வலி.வடக்கில் இருந்து அப்புறப்படுத்த முடியாது அவர்களோடு தான் இருக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் ஏனைய பிரதேசங்களிலும் மக்கள் இராணுவத்தினருடன் தானே இருக்கிறார்கள். இதற்கு நாம் எதையும் செய்ய முடியாது" என்று திமிராக பதிலளித்தாராம் .
எங்கள் அன்னை தாயகமான தமிழீழத்தை ஆக்கிரமித்திருக்கும் இனவழிப்பு வெறி பிடித்த சிங்கள படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்கு முறை கொலை கொள்ளை கடத்தல் சித்திரவதை பாலியல் வெறியாட்டம் என பல கொடுமைகளை நாம் அறிந்ததே.
மெல்லக் கொல்லும் இனப்படுகொலையின் கூறுகள் நடுவே தான் எம் மக்கள். ! இந்த வலிகளை இவர் ஒரு தமிழ் பெண்ணாக உணராது போனாலும் மனிதம் எஞ்சி இருந்தால் இப்படி பேசி இருப்பாரா?
தலை விரித்தாடும் அனைத்து அநீதிகளையும் களைந்து நீதியை நிலை நாட்ட மக்கள் கிளர்ந்தெழுவார்கள். மக்கள் போராட்டங்கள் இது போன்ற அத்தனை அநீதிகளுக்கும் நிச்சயம் முற்றுப் புள்ளி இடும்.

ad

ad