புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2015

ஸ்ரேயாஸ், யுவராஜ் அசத்தல்: சென்னையை எளிதில் வீழ்த்திய டெல்ல



ஐ.பி.எல் போட்டியின் 49வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள ஷாகித் வீர் நாராயண் சிங் மைதானத்தில் இன்று தொடங்கியது
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மெக்கல்லம், ஸ்மித் களமிறங்கினர்.
மெக்கல்லம் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதேபோல் ஸ்மித், ரெய்னா ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் சென்னை அணி 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தத்தளித்துகொண்டு இருந்தது.
பின்னர் அணித்தலைவர் டோனி மற்றும் டூ பிளஸிஸ் இணைந்து அணியின் ஓட்டங்களை உயர்த்தினர். இந்நிலையில் டூ பிளஸிஸ் 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். நிலைத்து நின்ற டோனி 1 சிக்சர் 3 பவுண்டரியுடன் 27 ஓட்டங்கள் எடுத்தார்.
இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்கள் எடுத்தது.
டெல்லி அணி தரப்பில் ஜாகிர்கான், அல்பி மோர்கல் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இதையடுத்து 120 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டி காக், ஸ்ரேயாஸ் ஐயர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
டி காக், டுமினி சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த ஸ்ரேயாஸ், யுவராஜ் ஜோடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். சிறப்பாக ஆடிய யுவராஜ் 32 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் டெல்லி அணி 16.4 ஓவர்களில் 120 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கடைசிவரை நிலைத்து நின்ற ஸ்ரேயாஸ் 1 சிக்சர், 10 பவுண்டரி உட்பட அரைசதம் கடந்து 70 ஓட்டங்கள் குவித்தார்.
சென்னை அணியில் இஸ்வார் பாண்டே, பவன் நெகி ஆகியோர் 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

ad

ad