புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2015

ராஜபக்சவினர் கொள்ளையர்கள் என விரைவில் நிரூபிக்கப்படும்: சரத் பொன்சேகா


தமக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய அரசாங்க காலத்தின் போது இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த படையினர் காரணமாக அமைந்தனர். எனினும் அன்றைய அரசாங்கம் அதனை முன்னெடுத்துச் செல்லவில்லை.
இந்தநிலையில் வடக்கு மக்களும் தென்னிலங்கை மக்களும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை வெறுத்தனர். இதனால் அவருடைய அரசாங்கத்துக்கு தோல்வி ஏற்பட்டது.
இப்போது மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஒதுங்கிச் செல்ல வேண்டிய தருணம் வந்துவிட்டதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவினர் அரச சொத்துக்களை களவாடினர் என்று குற்றம் சுமத்தப்படுகிறது. எனினும் எந்த குற்றமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதற்கு பதில் வழங்கியுள்ள அவர் விரைவில் அது உறுதிப்படுத்தப்படும். அது ஒன்று அல்லது இரண்டு நாட்களாகவும் இருக்கலாம்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க பல வருடங்கள் சென்றமைமையை பொன்சேகா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ad

ad