புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2015

புங்குடுதீவில் பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து டென்மார்க் தமிழ் பெண்கள் அமைப்பினரின் அறிக்கை

புங்குடுதீவில் பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்ற வித்தியா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இப்படுகொலையானது ஏனைய மாணவர் சமுதாயத்தின் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எமது மாணவர்கள் எமது தமிழீழத்தின் மிகப் பெரும் சொத்துக்கள். மாணவர்களின் கல்வியின் வளர்ச்சியிலும் மறைமுகமாக சிங்கள இனவாத அரசு தமிழர்களை அழிக்கின்றது.
இப்படுகொலையானது இன்றும் தமிழ் பெண்களுக்கு இலங்கைத்தீவில் எந்தவொரு பாதுகாப்பும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. போர் நடைபெற்ற காலத்திலும் சிங்கள இராணுவத்தால் பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
பாலியல் வன்புணர்வுக்கு பாடசாலை மாணவியை உள்ளாக்கி கொலை செய்யப்பட்டதை டென்மார்க் தமிழ் பெண்கள் அமைப்பாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
வித்தியாவின் படுகொலைக்கு காரணமான கொடியவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
இவர்களின் இந்த அவல வாழ்வு முற்றாக நிறுத்தப்பட்டு சுபீட்சமான எதிர்காலம் உருவாக்கப்படவேண்டும். இதற்கு அனைத்துலகு எங்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ்ப் பெண்களாகிய நாங்களும் மற்றைய பெண்களும் உதவ முன்வரவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
 

ad

ad