புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2015

புலம்பெயர் நாடுகளில் புங்குடுதீவு அமைப்புக்களின் கண்டன கூட்டங்கள்

புங்குடுதீவு வித்யாவின் படுகொலை: புலம்பெயர் நாடுகளில் கண்டனக் கூட்டமும், கண்ணீர் அஞ்சலியும்..!
காலம்: 17.05.2015, ஞாயிற்றுக்கிழமை. நேரம்: மாலைகீழே பார்க்கவும் 

கடந்த 13.05.2015 அன்று புங்குடுதீவு மகாவித்தியாலத்தில் கல்வி பயிலும் உயர்தர வகுப்பு மாணவியான செல்வி. வித்தியா சிவலோகநாதன் அவர்களின் படுகொலையைக் கண்டித்து புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இயங்கும் அனைத்துப் புங்குடுதீவு அமைப்புகளும், மக்களும் ஒரு குடையின் கீழ் இணைந்து இந்தக் கொடும்செயலைக் கண்டிப்போம்.
கல்வி ஒன்றே வாழ்வின் எல்லாமும் என்று வாழும் எம்மினம், அதனைக் கண்ணாகப் போற்றி வாழ்ந்த ஓர் இளம் தளிர் காமுகர்களின் கயமைத்தனத்திற்குப் பலியாகிப் பாதிவழிதனில் பரலோகம் அனுப்பி வைக்கப்பட்ட அநியாயச் செயலைக் கண்டிக்கின்றோம்.
இந்தக் கொடிய தொற்று நோயானது ஏனைய கிராமங்களில் வாழும் எமது உறவுகளைப் பீடித்து விடாதிருக்க எல்லோரும் ஓரணியில் திரண்டு குரல் கொடுப்போம்.
அக்கிரமக்காரர்களால் அழிக்கப்பட்ட அந்தச் செல்வ மகளைப் பிரிந்து தவிக்கும் உறவுகளின் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்வோம். அந்தக் கல்விக் களஞ்சியமான கலைமகளின் ஆத்மசாந்திக்காய் வேண்டுவோம்.
பாகுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் ஓரணியில் திரண்டு வருகை தருமாறு அன்போடு வேண்டி நிற்கின்றோம்.
கனடாவில்..;
இடம்..; கனடா ஶ்ரீ ஜப்பன் இந்து ஆலயம் (மாலை: 17.00 மணி.)
635 middle field rd, Scarborough on, M1V5B8, Canada
பிரான்சில்..; 
இடம்..; 50 Rue de torcy, 75018 Paris (M Marx Dormoy) (மாலை: 15.00 மணி.)
லண்டனில்..;
மண்டப முகவரியை லண்டன் புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
சுவிசில்…;
இடம்: பேர்ன் ஞானலிங்கேச்சுரர் ஆலய மண்டபம் (மாலை: 17.30 மணி.)
Europa Platz , 1, 3018 Bern.
வழிகாட்டி: ( Navi ) Freiburg str, 170, 3018 Bern.
-புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா –
-புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்-
-புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் பிரித்தானியா-
-புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.-
-நோர்வே, ஜெர்மனி, டென்மார்க், இத்தாலி, பின்லான்ட், சுவீடன், அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளில் உள்ள பொது அமைப்புகளும், பொதுமக்களும்..-

ad

ad