வெள்ளி, மே 22, 2015

புலிகளும் இப்படித்தான் ஆரம்பித்தார்களாம்- மஹிந்த ராஜபச


புங்குடுதீவு மாணவியின் கொடூரக் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு,கிழக்கில் மக்கள் முன்னெடுத்த போராட்டங்களை தமிழீழ
விடுதலைப் புலிகளின் போராட்டத்தோடு ஒப்பிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபத��� மஹிந்த ராஜபச
 
தமிழீழ விடுதலைப் புலிகளும் இவ்வாறு தான் போராட்டத்தை ஆரம்பித்தார்கள் எனவே இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற அனுமதிக்கக்கூடாது.என்றார் அவர் யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவங்களின் பின்னால் ஒரு குழுவினர் இருக்கின்றனர் என்று குறிப்பிட்டார்.
 
 
வடக்கில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புக் குறித்து கொழும்பு ஊடகங்கள் சில,முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கருத்துக் கேட்டன.அதற்குப் பதிலளித்த அவர் இவ்வாறு தான் புலிகளின் போராட்டமும் ஆரம்பமாகியது என்றார்.