புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2015

ஊழலற்ற சேவையினை மக்களுக்கு வழங்குங்கள்; வடக்கு முதல்வர் அறிவுரை 
கடந்த காலங்களில் அரசியல் வாதிகள் கல்வித் தகமைகளை கருத்தில் கொள்ளாது தங்களுடைய அரசியலை வளர்ப்பதற்கு நியமனங்களை வழங்கினார்கள்
என வடமாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
உள்ளுராட்சி சபைகளின் அட்டவனைப்படுத்தப்படாத தொழில்களில் கடமையாற்றியோருக்கு நிரந்தர நியமனங்களை வழங்கும் நிகழ்வு யாழ்.பொதுநூலகத்தில் இன்று நடைபெற்றது. 
 
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
கடந்த கால அரசியல் வாதிகளின் இவ்வாறான செயற்பாட்டினால்  பாரிய பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கின. 
 
தகமைகள் இல்லாதவர்கள் தொடர்ந்தும் பதவியில் இருக்க வேண்டிய சூழ் நிலை உருவாகின்றது. அத்துடன் தங்களை பதவியில் நியமித்தவர்களிற்கு விசுவாசமுடையவராக இருக்க வேண்டிய கடப்பாடும் கட்டாயமும் ஏற்படுகின்றது. 
 
இதற்கு நாம் தனியொருவரை குற்றம் சுமத்த முடியாது. அவர்கள் அத்தகையதொரு செயற்திட்டத்துக்குள் அகப்பட்டுள்ளார்கள்.
 
எனினும்  மக்களது சிந்தனைகளிலும் விழிப்புணர்வும் மாற்றமும் ஏற்பட வேண்டும். 
தற்போது நீங்கள் இந்த தொழில்களில் நீண்ட காலமாக வேலை செய்கின்றீர்கள். உங்களிற்கு இந்த தொழில்களை எதோவொரு கட்சியும் பெற்று தந்திருக்கலாம். அதற்காக உங்களை இந்த தொழில்களில் இருந்து அகற்றுவதை நாம் தவறாகவே கருதுகின்றோம்.
 
எவ்வளவு காலமாக வேலையில் இருக்கிறீர்களோ அந்த அடிப்படையில் உங்களது சேவையை மனதிற் கொண்டு உங்களிற்கான நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் நாங்கள் அப்போதயைய ஜனாதிபதியிடம் பேசியிருந்தோம். 
 
அவரும் இதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார். எது எவ்வாறு இருப்பினும் தற்போது உங்களிற்கு நியமனங்கள் கிடைத்துள்ளன. 
 
அவ்வாறு நியமனம் கிடைத்துள்ளது எனக் கூறும் போது நீங்களும் அரசாங்கத்தில் ஒரு பகுதியாக வருகின்றீர்கள். எனவே மக்களிற்கு பொறுப்பு கூறுகின்றவர்களில் நீங்களும் ஒருவராகிவிட்டீர்கள்.
 
அரசாங்கம் வேறு நாங்கள் வேறு என்ற சிந்தனை தற்போது நிலவி வருகின்றது. 
 
இது அரசாங்கத்திற்கு உரியது நாம் இதை எவ்வளவு வேண்டுமானாலும் என்னவும் செய்யலாம் என்ற சிந்தனை காணப்படுகின்றது.
 
இத்தகைய சிந்தனை எண்ணங்கள் நீக்கப்பட வேண்டும். தற்போது எங்களை நாங்களே ஆழுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 
 எனவே நாங்கள் எமது அரசாங்க உத்தியோக வாழ்க்கையில் வெளிப்படைத் தன்மையுடனும்  நிறுவனங்களது நன்மை கருதியும் ஊழல் அற்ற முறையிலும் செயற்பட வேண்டும் என அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

ad

ad