புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மே, 2015

திய அரசாங்கம் மீது தமிழ் முஸ்லிம் கட்சிகள் அசைக்க முடியாத நம்பிக்கை: ஆனால்....

20 சிறுபான்மையின மக்களை பாதித்தால் போராட்டம்

ஹக்கீம், ரிசாத், மனோ, திகா கூட்டாகத் தீர்மானம்: சம்பந்தனும் இணைந்து கொள்வாராம்
தேர்தல் முறை மறுசீரமைப்பு தொடர் பான உத்தேச 20 ஆவது அரசியலமைப் புத் திருத்தத்தின் போது அது சிறுபான்மை சமூகங்களைப் பாதிக்காத வகையில் அமைவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென
அச்சிறுபான்மைச் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தி யுள்ளன. இதற்கான முன் நடவடிக்கைகளை குறிப்பாக முஸ்லிம் மற்றும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் எடுத்து வருகின்றன.
இதன் முதற் கட்டமாக அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்துத் தம்மால் தயாரிக்கப்பட்ட ஒரு வரைபை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர். அத்துடன் இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், தேசிய நிறைவேற்றுச் சபையின் உறுப்பினருமான மனோ கணேசனும் நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் இவ்விடயத்தில் நியாயமாகச் செயற்படும் எனத் தாம் திடமாக நம்புவதாக நம்பிக்கை தெரிவித்துள்ள இத் தலைவர்கள் அவ்வாறு அரசாங்கம் தமது கருத்துக்களை உள்வாங்காது செயற்பட்டால் அதற்கு தமது எதிர்ப்பை காட்டுவதைத் தவிர வேறுவழியில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இன்றைய அரசாங்கம் ஆட்சியை அமைக்க சிறுபான்மையின மக்களது பங்களிப்பே பிரதானமாக அமைந்திருந்தது எனவும் அது அரசாங்கத்திலுள்ள தலைவர்களுக்கு நன்கு தெரியும் எனவும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை இந்தத் தேர்தல் மறு சீரமைப்பினால் வடக்கு கிழக்கில் எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது போனாலும் அவ்விரு மாகாணங்களுக்கும் வெளியே வாழுகின்ற சிறுபான்மையின மக்களைப் பாதிக்கின்ற செயற்பாட்டிற் காகக் குரல் கொடுத்தவரும் இதர சிறுபான்மைக் கட்சிகளுடன் தமது கட்சியும் கலந்து கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
19 ஆவது திருத்தச் சட்டத்தில் வெற்றி கண்ட அரசாங்கம் தற்போது நடை முறையிலுள்ள விகிதாசார தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான புதிய 20 ஆவது திருத்தத்தை அமைச்சரவை அங்கீகாரத்தோடு விரைவாகவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீவிர முஸ்தீபுகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதனால் சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படவுள்ளதாக சிறுபான்மை இனக் கட்சிகள் குற்றஞ் சாட்டி வருகின்றன.
இவ்விடயத்தில் அரசாங்கம் அவசரம் காட்டாது சிறுபான்மைக் கட்சிகளினதும் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டுமென அக்கட்சிகளின் தலைமைகள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக கடந்த வாரம் அமைச் சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட வரைபு இறுதி யானதல்ல எனவும் அனைத்துக் கட்சி களினதும் கருத்துக்களும் உள்வாங்கப் படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தெரிவித்ததாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக தமக்கிடையே தொடர்ச்சியான சந்திப்புக்களை நடத்துவதுடன் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்க ஆகியோரைச் சந்தித்துரையாடுவது எனவும் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

ad

ad