புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2015

பிரித்தானியாவின் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அதிகளவில் தமிழ்மக்களை பங்கெடுக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் !

பிரித்தானியாவில் இடம்பெறவிருக்கின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில், அதிகளவிலான தமிழ்மக்களது பங்கெடுப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு பரப்புரைகளை மேற்கொண்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியப் பிரதிநிதிகள் ,  வாக்குரிமையினை தவறாது பயன்படுத்துமாறு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தேசங்களில் இடம்பெறுகின்ற உள்நாட்டுத் தேர்தல்களில், அந்தந்த நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு வழங்கியுள்ள வாக்குரிமையினை பயன்படுத்துவதனை ஊக்குவிக்கும் தீர்மானமொன்று நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் ஏலவே நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் மே7ம் நாள் வியாழக்கிழமை பிரித்தானியாவில் இடம்பெறவிருக்கின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அதிகளவிலான தமிழ்மக்களை பங்கெடுக்குமாறு நா.தமிழீழ அரசாங்கத்தின் பொதுசன விவகாரங்கள் அமைச்சு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சனநாயவழிமுறை தழுவிய இன்றைய ஈழவிடுதலைப் போராட்டத்தின் மென்வலுவில் புலம்பெயர் தேசங்களில் வாழுகின்ற ஈழத்தமிழ் மக்களின் வகிபாகம் முக்கியமான ஒன்றாகவுள்ள நிலையில் புலம்பெயர் தேசங்கள் தங்கள் குடிமக்களுக்கு வழங்கியுள்ள வாக்குரிமையினை உரியமுறையில் பயன்படுத்துவதன் ஊடாக தமிழ்மக்கள் அத்தேசங்களில் தங்களது சமூக அரசியல் இருப்பினை உறுதியாக அடையாளப்படுத்த முடியும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலில், ஈழத்தவர்களான செல்வி உமா குமரன் மற்றும் திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடதக்கது.

ad

ad