புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2015

ஜூன் மாதம் இரண்டாம் வாரம் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது


நாடாளுமன்றத்தை எதிர்வரும் ஜூன் மாதம் இரண்டாம் வாரம் கலைத்து,  ஆகஸ்ட் 27ம் திகதி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்திற்கு முன்னர் புதிய அரசாங்கத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் ஆகஸ்ட் இறுதி வாரத்தில் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை 20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை துரிதமாக தீர்க்க முடியாது போனால், அந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்றாது தேர்தலுக்கு செல்ல வேண்டும் என சில அரசியல் கட்சிகள் ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

ad

ad