புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மே, 2015

வீசா இன்றி இந்தியா செல்ல முடியாது; இந்திய துணைத்தூதுவர்


இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு செல்லவுள்ளவர்கள் வீசாவினைப் பெற்றே விமானநிலையத்தினூடாக செல்ல முடியும் என யாழ். இந்திய துணைத்தூதுவர் நடராஜன் உதயன் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். 
 
 
 
இலங்கையில் இருந்து இந்தியா செல்வதற்கு வீசா பெற்றுச் செல்லும் முறைமை தொடர்ந்து வரும் நிலையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஈ.வீசா ( இணைய வீசா) வினால் மக்கள்  மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. 
 
பலர் ஈ.வீசா என்றால் வீசா இல்லாது இந்தியாவுக்குச் செல்ல முடியும் என நம்பி பயனச்சீட்டை பெற்று விமானநிலையத்திற்குச் சென்று ஏமாற்றத்துடன்  திரும்பி வருகின்றனர். 
 
இது தொடர்பில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும்  சந்தேகத்தை தீர்க்கும்  வகையில் யாழ். இந்திய துணைத்தூதுவர் நடராஜன்  அவர்களிடம் எமது செய்திப்பிரிவு கேட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 

ad

ad