புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2015

ஆடை வர்த்தக வலையமைப்பின் உரிமையாளரான மொஹமட் அமீனிடம் லட்சம் கப்பம் பெற்ற மகிந்த இன்னும் பல அம்பலம்

போர் நடைபெற்ற காலத்தில் கடத்தப்பட்ட தமிழ் முஸ்லிம் வர்த்தகர்களிடம் கோடிக்கணக்கில் கப்பம் பெற்ற மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த ஆரம்ப காலத்தில் அதாவது 2006 ஆம் ஆண்டு போர் நடைபெற்ற நேரத்தில் நாட்டின் முன்னணி தமிழ் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களை வெள்ளை வான்களில் கடத்தி, அலரி மாளிகைக்கு கொண்டு வந்து கோடிக்கணகில் கப்பம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கான சாட்சியங்கள் இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. கடத்திச் செல்லப்பட்டு கப்பம் பெறப்பட்டவர்களில் இலங்கையின் முன்னணி ஆடை வர்த்தக வலையமைப்பின் உரிமையாளரான மொஹமட் அமீன் என்பவரும் ஒருவர்.
கண்கள் கட்டப்பட்ட நிலையில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்ட இவரை அலரி மாளிகைக்கு வரவழைத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 300 லட்சம் ரூபாவை கப்பமாக பெற்றதாக கடத்தலுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் கூறியுள்ளார்.
கப்பம் செலுத்தாத வர்த்தகர்கள் மீது புலி முத்திரை குத்தி அவர்களை கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு சென்று சித்திரவதை செய்து கொலை செய்த பின்னர், உடலை முட்கம்பிகளுடன் கல்லை சேர்த்து கட்டி கடலில் மூழ்கடித்து காணாமல் போக செய்துள்ளனர்.
சிலர் கப்பம் செலுத்திய போதிலும் அவர்களும் இவ்விதமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். நிதியமைச்சராகவும் இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வரி செலுத்தாத வர்த்தகர்கள் பற்றிய தகவல்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் இருந்து பெற்றுள்ளார்.
இந்த சம்பவங்களுடன் கீர்த்தி கஜநாயக்க என்ற புலனாய்வுப் பிரிவின் பிரதான அதிகரியும் சம்பந்தப்பட்டுள்ளார். அபேரத்ன என்ற புலனாய்வுப் பிரிவின் அதிகாரி, ராஜபக்சவினருக்காக கடத்திச் சென்று கொலைகளை செய்த பிரதான நபர்களில் ஒருவர் எனக் கூறப்படுகிறது.
வெள்ளவத்தை எண்ணெய் முதலாளி, கொழும்பு சீனி முதலாளி ஆகியோர் கடத்திச் செல்லப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.
வெள்ளவத்தையில் உள்ள பிரதான நாணயமாற்று நிலையம் ஒன்றிலும் இவர்களே கொள்ளையிட்டுள்ளனர். இப்படியான அனுபவங்களை பல வர்த்தகர்கள் எதிர்நோக்கியிருந்தாலும் ராஜபக்சவினர் சுதந்திரமாக இருப்பதால், அவர்கள் மீதுள்ள அஞ்சம் காரணமாக இந்த வர்த்தகர்கள் முறைப்பாடு செய்ய முன்வருதில்லை.
அபேரத்ன என்ற புலனாய்வு பிரிவின் கொலையாளியை மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜக்ச ஆகியோர் நேரடியாக வழிநடத்தியுள்ளனர்.
ஃபேயின் ரொயிஸ்டன் கிறிஸ்டோபர் துனேஸ்ட் என்ற கொலையாளியும் அபேரத்ன கொலை குழுவை சேர்ந்தவர் எனவும் அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.
இவர்கள் இருவரும் இணைந்தே 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் திகதி கொழும்பு ரயில் நிலையத்தில் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களை கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர்.
அபேரத்ன மற்றும் துனேஸ்ட் ஆகியோர் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட போதிலும் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் இல்லை எனக் கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
போதுமான சாட்சியங்கள் இருக்கும் நிலையில், மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பதிலாக இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு பேச்சுவார்த்தை நடத்துவது இழிவான செயல் எனவும் அந்த சிங்கள இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 9 வருடங்களாக ராஜபக்சவினரால் அழிக்கப்பட்ட நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே நாட்டின் அரசியல் கட்சிகள் உட்பட 49 அமைப்புகள் இணைந்து ஜனவரி 9 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனவை நாட்டின் தலைவராக்கியதாகவும் சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்ப அவரை நாட்டின் தலைவராக்கவில்லை என்பதை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.

ad

ad