புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2015

முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சுய தொழில் வாய்ப்பு: வட மாகாண சபை உதவி


புனர்வாழ்வளிக்கப்பட்டு வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும்  முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு சுய தொழில்களை ஆரம்பிக்க நிதி உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்திற்கான யோசனை ஒன்று வட மாகாணசபையினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சுய தொழில்களுக்கு மேலதிகமாக அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்கி கொடுப்பது குறித்தும் மாகாண சபை கவனம் செலுத்தியுள்ளது.
வடமாகாணத்தில் வேலை வாய்ப்பற்ற நபர்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இராணுவ புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்றுக்கொண்டு வீடு திரும்பிய நபர்களுக்கு அரசாங்கம் பல்வேறு தொழிற்பயிற்சிகளை வழங்கி வருகிறது.
ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுதலையாகி வருபவர்களுக்கு இச்சலுகைகள் கிடைப்பதில்லை என்று குறித்த யோசனையை முன்வைத்து உரையாற்றிய வடமாகாண விவசாய அமைச்சர் பீ.டெனீஸ்வர் தெரிவித்துள்ளார்.

ad

ad