புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2015

ஜெயலலிதாவும், கருணாநிதியும் சந்தித்தால்...?



சியல் நாகரீகம் என்பது மருந்துக்குக் கூட தமிழகத்தில் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. படித்த,
பண்பட்ட,  மூத்த தலைவர்கள் அரசியல் நாகரீகத்தை கொஞ்சமும் கடைபிடிப்பதில்லை என்பது வேதனையை தான் ஏற்படுத்துகிறது.

ஒரு தடவை நேரு, தன் ஆட்சியைப் பற்றி தானே விமர்சித்து புனை பெயரில் கட்டுரை வெளியிட்டாராம். அந்தளவுக்கு மக்களின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் அபிமானமும், இந்தியாவின் வளர்ச்சியின் மீது அக்கறையும் கொண்ட தலைவர்கள் இருந்த இந்தியாவில், இப்போது இருக்கும் தலைவர்களின் செயல்பாட்டை என்னவென்று சொல்வது?

அன்பும், உறவும், நட்பும் இன்றைக்குள்ள அரசியல் கட்சிகளிடையே மலர்ந்தால், மணம் வீசினால் அந்த நாகரிகத்தை எல்லோரும் பெற்றால், கட்சித் தகராறுகள், கொள்கைப் பூசல்கள், லட்சிய வேறுபாடுகள் இவைகளையெல்லாம் மறந்து விட்டு, நட்பு வேறு என்ற அந்த அரசியல் நாகரிகத்தை உலகத்திலே, தமிழ்நாட்டைத் தவிர வேறு எல்லா இடங்களிலும் பெற்றிருக்கிறார்கள். தமிழ் நாட்டில்தான் அந்த உறவு மனப்பான்மை, நேச மனப்பான்மை, நாகரிகம் இல்லை.
தந்தை பெரியாரும், மூதறிஞர் ராஜாஜியும், ஜென்ம விரோதிகள் என்று கிராமங்களில் சொல்வார்களே, அதுபோல இருந்தாலும் கூட ராஜாஜி மறைந்தபோது, அந்த நிகழ்வுக்காக கண்ணீர் வடித்தவர் தந்தை பெரியார். அப்படி பல தலைவர்கள் தமிழகத்திலே அரசியல் நாகரிகத்தை வளர்த்திருக்கிறார்கள். இன்றைக்கு அரசியல் நாகரிகம் என்றால் என்ன விலை, எந்தக்கடையிலே விற்கிறது என்று கேட்கின்ற அளவுக்கு, விசாரிக்கின்ற அளவுக்கு நாகரிகம் நலிந்து, நசிந்து போய் விட்டது.

ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் எதிரிகளாக இருக்கும் காட்சியை, தமிழகத்தில் மட்டும்தான் காண முடிகிறது. அருகில் உள்ள கர்நாடகத்தில் கூட நல்ல சூழல் நிலவுகிறது. எதிர்க்கட்சியினர் குடும்பங்களில் நடைபெறும் திருமணங்கள், இறப்பு போன்ற சடங்குகளில், ஆளும்கட்சியினர் கலந்து கொள்வதே, மாபெரும் குற்றமாக இங்கு கருதப்படுகிறது. ஆனால், மத்தியில், பா.ஜ., மற்றும் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சியினரும், காங்கிரஸ் கட்சியினரும் அரசியல் எதிரிகள் தான் என்றாலும், தலைவர்கள் நட்பில், எவ்வித மாற்றமும் இல்லை.

இதை பார்த்தாலாவது, தமிழக அரசியல்வாதிகள், அரசியல் நாகரிகத்தை பின்பற்றுவரா? என்று ஏங்கிய நிலையில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது சகோதரர் மகன் திருமண விழாவிற்கு தமிழகத்தின் அனைத்து அரசியல் தலைவர்களையும் பாகுபாடின்றி நேரில் அழைப்புக்கள் கொடுப்பது மிகவும் மகிழ்ச்சியானது.

சமீபத்தில் கருத்து மோதல் உச்சமடைந்த நிலையிலும்  ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் சந்திப்பு என்பது நாம் அனைவரும் விரும்பும் டெல்லி அரசியல் நாகரிகத்தை தொட்டு விட்டோம் என்பது போன்ற அர்த்தமாகும். இந்நாள் முதல்வரான அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவும், முன்னாள் முதல்வரான தி.மு.க. தலைவர் கருணாநிதியும், பொது நிகழ்ச்சிகளிலோ, ஏன் சட்டமன்றத்தில் கூட சந்தித்து பல வருடங்கள் ஆகின்றன. அது வருந்ததக்கது. இரு தலைவர்களும் சந்தித்தால் தமிழகம் வளமும், நலமும் பெறுவது உறுதி.

மோடி, முலாயம், லல்லு சந்திப்பு, போன்று ஸ்டாலின், ஜெயலலிதாவோ, கருணாநிதி, ஜெயலலிதாவோ சந்திப்பு நடந்தால் அதுவே தமிழக அரசியல் நாகரிகத்தின் வெற்றி நாளாகும்

ad

ad