புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2015

கோத்தாவின் கைது நிறுத்தப்பட்டது ரணில் மற்றும் சட்டமா அதிபரின் முயற்சியே இணையத்தளம்


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தாக்கல் செய்த மனுவின் மீது உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து அரசியல் மற்றும் சட்டவல்லுநர்கள் மத்தியில் கவனம் செலுத்தப்படுகிறது.
தம்மை கைது செய்யக்கூடாது என்று கோரி கோத்தபாய தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் ஏற்று அவருடைய விசாரணை முடியும் வரை அவரை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது.
இதன்படி ஆட்சேபனை மனு ஜூலை 17ஆம் திகதியும் விசாரணை ஒக்டோபர் 6ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.
எனினும் தமது எதிர்மனுவை கோத்தபாபய ராஜபக்ச தாக்கல் செய்வதற்கான மனு தொடர்பில் திகதி குறிக்கப்படவில்லை. 
எனவே சாதாரண சட்டப்படி கோத்தபாயவின் அடிப்படை உரிமைமீறல் மனுவின் தீர்ப்பு வெளிவர இரண்டு வருடங்கள் பிடிக்கக்கூடும்.
இந்தநிலையில் மனுவை விசாரணை செய்த சரத் டி ஆப்ரூ மற்றும் ஈவா வணசுந்தர ஆகிய இரண்டு நீதியரசர்களும் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் என்று கொழும்பு இணையத்தளம் ஒன்று கூறுகிறது.
மூன்றாமவர் புவனக்க அலுவிஹார தனித்து செயற்படக்கூடியவர். எனினும் தனிப்பட்ட காரணங்களால் அவர் விசாரணைகளில் இருந்து விலகிக்கொண்டார்.
கோத்தபாய கைது செய்யப்படுவதை பிரதமர் ரணில் தடுக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியாகியிருந்தநிலையில் சட்டமா அதிபர் திணைக்களமும் கோத்தபாயவுக்கு தற்காலிக நிவாரணத்தை அளித்துள்ள இந்த தீர்ப்பில் பங்காளராக இருக்கலாம் என்று இணையத்தளம் சுட்டிக்காட்டுகிறது.
அரசாங்கத்தின் தரப்பில் ஆஜரான இரண்டு சட்டத்தரணிகள் மூவரில் இருவர் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்களாவர் என்றும் இணையத்தளம் கூறுகிறது.
இந்தநிலையில் பிரதிசொலிஸிட்டர் ஜெனரலும் தாம் (கோத்தபாய) கைது செய்யப்படக்கூடாது என்று தாக்கல் செய்த மனுவின் காரணங்களுக்கு பதிலாக வலுவான எதிர்க்காரணங்களை முன்வைக்கவில்லை.
அவரிடம் உரிய தகவல்கள் இருந்தபோதும் அரசாங்க மட்டத்தில் இருந்து கிடைத்த அறிவுரைக்கு ஏற்ப அவர் செயற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
லங்கா ஹொஸ்பிட்டல்ஸ், மிக் 27 விமானக் கொள்வனவு விடயங்களில் கோத்தபாயவுக்கு எதிராக வலுவான சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே சட்டமா அதிபர் திணைக்களம் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் செல்வாக்கை கொண்டுள்ளமை காரணமாகவே கோத்தாவுக்கு தற்காலிக நிவாரணம் கிடைத்திருக்கலாம் என்று இணையத்தளம் கருத்து வெளியிட்டுள்ளது.

ad

ad