புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2015

புலம்பெயர் தேசங்களில் உணர்வுபூர்வமாக தொடங்கிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்: நா. தமிழீழ அரசாங்கம்
மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்தியதான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் மே12ம் செவ்வாய்கிழமை உணர்வுபூர்வமாக புலம்பெயர் தேசங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரச ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தமிழீழத் தாயகத்திலும், இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புலம்பெயர் தேசங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, சுவிஸ் என பல்வேறு இடங்களில் நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால், தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு கூட்டு நினைவு ஆகும். யூதர்கள்மேல் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு, எவ்வாறு யூத மக்களிடையே ஒரு வரலாற்றுக் கூட்டு நினைவாக அமைந்ததோ, அதேபோல ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் முள்ளிவாய்க்கால் ஒரு முக்கியமான கூட்டுநினைவாக அமைகிறதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நினைவேந்தல் செய்தியில் குறிக்கப்பட்டுள்ளது.

ad

ad