புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2015

எந்த தவறும் செய்யவில்லை

எனது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை உச்ச நீதிமன்றம் போக்கியுள்ளது
தயாரென திறைசேரி முறி விநியோக சர்ச்சைக்குள்ளாகியிருந்த மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தெரிவித்தார்.
“நான் எந்த தவறும் செய்யவில்லை. எனது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை அழிப்பதற்காக நான் எந்தவொரு சட்ட அமுலாக்கல் அமைப்புக்கு முன்னாலும் நேரில் செல்ல தயார். உச்ச நீதிமன்றம் எனது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்கியுள்ளது. அதேபோன்று ஏனைய விசாரணைகளும் உண்மையை வெளிப் படுத்தும்.” என்றும் அர்ஜுன மகேந்திரன் கூறினார்.
“முறி விநியோக விவகாரம் தொடர்பில் சில கட்சிகள் எனது மருமகனையும் என்னுடன் இணைத்து குற்றம்சாட்டியி ருந்தனர். உண்மையில் நான் மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்றதும் எனது மரு மகன், குறித்த கம்பனியில் வகித்து வந்த பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியை இராஜினாமா செய்து விட்டார். முரண்பாடுகள் ஏற்படக்கூடாது என்பதற்காகவே அவர் அதனை செய்தார்” என்றும் அவர் தெரிவித்தார்.
“மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட முன்னாள் அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகளுடன் எனது மருமகன் ஏதேனும் தொடர்புகளை வைத்திருந்தாரா என தான் அவர் எனது மகளை திருமணம் முடிப்பதற்கு முன்பே கேட்டிருந்தேன். அவ்வாறான தொடர்புகளை அவர் முற்றாக மறுத்திருந்தமை எனக்கு பூரண திருப்தியளித்திருந்தது. அவருக்கு கடந்த அரசாங்கத்துடன் கேள்விகள் எழுப்பக்கூடிய அளவு தொடர்புகள் இருக்குமென நான் நினைக்கவில்லை.” என ஆளுநர் கூறினார்.
இதேவேளை மத்திய வங்கி ஆளுநரின் மருமகன் அர்ஜுன அலோசியஸ், முறி விநியோக விவகாரம் தொடர்பில் சர்ச்சைக்குள்ளான கம்பனியில் எவ்வித பங்குகளையும் கொண்டிருக்கவில்லை என்றும் மகேந்திரன் தெரிவித்தார்.
“குறித்த கம்பனியில் எனது மருமகனின் சில குடும்ப அங்கத்தவர்கள் பங்குகளை கொண்டுள்ளனர். ஆனால் எனக்கு தெரிந்தவரை அவருக்கு அந்த கம்பனியில் எவ்வித பங்குகளும் இல்லையெனக் கூறினார்.
இந்த சர்ச்சைக் குறித்து மருமகனுடன் கலந்துரையாடி உள்Zர்களாவென கேட்டதற்கு, “இந்த விடயம் தொடர்பில் பலரும் விசாரணைகளை நடத்தி வருவ தனால் அவை அனைத்தும் முடிவுக்கு வரும் வரை நான் காத்திருக்கிறேன். அதற்குப் பின்னர் நான் அவருடன் அமர்ந்து இது குறித்து கலந்துரையாடுவேன்” என்றார்.
திறைசேரி முறி விநியோக நடவடிக்கைகள் மத்திய வங்கியினாலேயே முன்னெடுக்கப் பட்டன. விலை மனுச்சபை பற்றிய தீர்மானங்களை நான் தனித்து முடிவு எடுக்க வில்லை. இது குறித்த விசாரணைகளை மேற்கொண்ட மூவரடங்கிய குழுவும் அதனை உறுதி செய்திருந்தது.
நாங்கள் முறிகளை விநியோகித்த விடயத்தில எந்த தவறும் இடம்பெற வில்லை. ஆனால் அதனை குறித்த கம்பனிக்கு வழங்கிய முறைமை தொடர் பிலேயே மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன என்றும் மத்திய வங்கி ஆளுநர் தனது நிலைப்பாடு குறித்து விளக்கமளித்தார்.

ad

ad