புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2015

பிரதமர் வேட்பாளராக சபாநாயகர் சமல் ராஜபக்ச களமிறங்க ஆயத்தமாகிவருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள்


எதிர்வரும் பொது தேர்தலில் பிரதமர் வேட்பாளராக சபாநாயகர் சமல் ராஜபக்ச களமிறங்க ஆயத்தமாகிவருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினுள் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக கொண்டு வருவதற்கு மேற்கொண்ட முயற்சியினை தோல்வியடைய செய்வதற்காகவே சபாநாயகர் சமல் ராஜபக்சவை பிரதம வேட்பாளராக நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்ச, பலவித சிக்கலின் போது பிரச்சினையை குறைத்துக்கொண்டு செயற்பட கூடிய ஒருவர் என்பதனால் அவருக்கு கட்சியினுள் எதிர்ப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
இதனாலேயே இத்தீர்மானத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் வேட்பாளராக சபாநாயகர் சமல் ராஜபக்சவை நியமிப்பதற்கான யோசனை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ad

ad