புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2015

எதிர்வரும் தேர்தல் தற்போதைய முறையில் நடத்துவதற்கு ஜனாதிபதிமபிரதமர் இணக்கம்,ஜூலையில் தேர்தல்


20ம் திருத்தச்சட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொது தேர்தல் ஜுலை மாத இறுதியில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துந்துரையாடலில் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய தேர்தல் முறை உள்ளடக்கப்பட்ட 20ம் திருத்தச்சட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் எதிர்வரும் பொது தேர்தல் தற்போதைய முறையில் நடத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய முறையின் கீழ் தேர்தல் தேர்தல் பிரிவுகள் மறுபங்கீடு செய்யப்படுவது மற்றும் அது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு குறைந்த பட்சம் 06 மாத காலங்கள் தேவைப்படும் என்பதனால் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொது தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்ற இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உட்பட எதிர்கட்சிகள் பல எதிர்வரும் பொது தேர்தலை புதிய தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும் எனவும் 19ஆம் திருத்தச்சட்டத்திற்கு ஆதரவு வழங்கியதற்கான பிரதான ஒப்பந்தங்களில் ஒன்று இதுவெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய தேர்தல் முறையின் கீழ் நடத்துவதற்கு பல மாதங்கள் தேவைப்படுவதனால் தற்போதைய முறையில் நடத்துவதற்கே இணக்கபாடுகள் எட்டப்பட்டுள்ளன.

ad

ad