புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2015

மாணவி வித்தியா படுகொலைக்கு எதிரான போராட்டங்களால் முற்றாக முடங்கியது குடாநாடு

புங்குடுதீவு மாணவி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு உச்சத் தண்டனையை பெற்றுக்கொடுக்க
வலியுறுத்தியும், நடத்தப்படும் பொதுமக்களின் போராட்டங்களினால் யாழ். குடாநாடே இன்று செயலிழந்து போயுள்ளது.
இன்று காலை தொடக்கம் வீதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டு போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
யாழ்.நகரப்பகுதிகளில் கண்டனப் பேரணிகள், எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
பாடசாலை மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், பேரணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து, எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை மாணவர்கள், தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்.போதனா மருத்துவமனைப் பணியாளர்கள், சுகாதாரத் திணைக்களப் பணியாளர்களும் எதிர்ப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
யாழ்.செயலகம் முன்பாக ஆசிரியர் சமூகம் உள்ளிட்டோர் பங்கேற்கும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

ad

ad