புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2015

சமகால அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: மஹிந்தானந்த அலுத்கமகே


எதிர்வரும் ஜூன் மாதம் 9ம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாரஹென்பிட்டி அபயாராமயவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அரசாங்கத்திற்கும் எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 85 கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளன. ஜூன் மாதம் 9ம் திகதியின் பின்னர் இந்த அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்றம் இயங்காது.
மஹிந்தவை பிரதமராக்கும் அடுத்த கூட்டம் ஜூன் மாதம் 12ம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு 75 கூட்டமைப்பு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.
அதன் பின்னர் அனுராதபுரத்தில் 100 உறுப்பினர்களின் பங்களிப்புடன் கூட்டம் நடத்தப்பட உள்ளது. எனது மகன் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
விமல் வீரவன்சவின் மனைவி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
எங்களது பிள்ளைகளையும் குடும்ப உறுப்பினர்களையும் இந்தப் பிரச்சினையில் தொடர்புபடுத்த வேண்டாம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனைவியை சீ.ஐ.டிக்கு அழைத்து விசாரணை செய்தால் அவருக்கு எவ்வாறு இருக்கும் என மஹிந்தானந்த அலுத்கமகே கேள்வி எழுப்பியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க குரோத ஆட்சியை மேற்கொண்டு வருகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்

ad

ad