புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2015

தீர்ப்பில் குளறுபடி: நீதிபதி குமாரசாமி அவசர ஆலோசனையால் பரபரப்பு


ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பில் உள்ள குளறுபடி உள்ளதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி அவசர ஆலோசனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்துள்ள தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்டோர் வங்கிகளில் இருந்து வாங்கிய கடன் தொகை குறித்த கூட்டலில் தவறு நடந்து இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் குற்றம் சாட்டி உள்ளனர். 

இந்நிலையில்,  நீதிபதி குமாரசாமி  தனது உதவியாளர்களுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். தீர்ப்பு வழங்கிய அறை எண் 14ல் இந்த ஆலோசனை நடந்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், ஜெயலலிதா விடுதலை தீர்ப்பில் தவறு இருப்பதாக கூறி வரும் நிலையில், குமாரசாமி அவசரமாக ஆலோசனை நடத்தி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த தகவல் அதிமுக வட்டாரத்தில் எட்டியுள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக உற்சாகத்தில் இருந்த அதிமுகவினர் மத்தியில் இலேசான கவலை எட்டி பார்க்க தொடங்கி உள்ளது. 

ad

ad