புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மே, 2015

பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் தேசிய செயற்பாட்டாளரான யோகலிங்கம்:

லண்டனில் இம்மாதம் (மே 07) நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், ஈழத் தமிழரான திரு. சொக்கலிங்கம்
யோகலிங்கம் தேசிய விடுதலை கட்சியில் (National Liberal Party) வேட்பாளராக போட்டியிடுகிறார்.
சுமார் 2,500 ஈழத் தமிழர்கள் செறிவாக வாழும் Pinner, Northwood, Ruislip பகுதியில் இவர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழர் நலனில் அக்கறையோடும், அர்ப்பணிப்போடும் முன்னின்று செயற்படுபவர் எனதும். தமிழர்களால் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு போராட்டங்கள், நடை பயணங்கள், ஊர்வலங்கள், நினைவுவணக்க நிகழ்வுகள் என அனைத்திலும் தவறாது கலந்துகொள்பவர் என்பதும், குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இவர் தமிழர் அல்லாதோரை தமிழர்களின் போராட்டத்தின் பால் அரவணைத்து அவர்கள் மூலம் பிரித்தானிய அரசிற்கும், சர்வதேசத்திற்கும் தமிழர் எதிர்னோக்கும் பிரச்சனைகளை கொண்டுசெல்பவர்.
இவ்வாறாண ஒருவரை பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியடையச் செய்வதன் ஊடாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழர் குரல் ஓங்கி ஒலிக்கவும், தமிழர்களுக்கான நீதியை பிரித்தானிய அரசிடம் இருந்து பெற்றெடுக்கவும் உதவும் என்பதில் அய்யமில்லை.
மேலதிக விபரங்களுக்கு :
YOGI - 07929 349 302
GRAHAM - 07970 455 445
Thank you,
S.Yogalingam (Yogi)
Candidate for General Election
National Liberal Party
www.nationalliberal.org
"Self Determination for Tamils via Referendum"

ad

ad