புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2015

புங்குடுதீவில் கசக்கி எறியப்பட்ட பூவரசம்பூ - டென்மார்க் சைவத் தமிழ்ப் பேரவை கண்டனம்.


புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலையானது மனித நாகரிகத்துக்கே
விடப்பட்ட ஓர சவாலாகும். கொடுரமான சிந்தனையும் கோழைத்தனமான செயல்களும் கூத்தாடும் கூட்டமொன்றின் குகையொன்று இந்தச் சிறிய புங்குடுதீவுக் கிராமத்தில் இருந்திருப்பது மிகவும் ஆச்சரியமானதாகும். தமிழ் மக்கள் ஓர் பொது எதிரியின் தளர்த்திய பிடியிலிருந்து விடுபடத் துடித்துக்கொண்டிருக்கும் இத் தருணத்தில் உள்வீட்டுக்குள்ளே யே பாம்பும் பூரானும் படையெடுப்பது துரதிர்ஸ்டமாகும். எத்தனையோ கல்விமான்களை, கஞைர்களை, மேதாவிகளை உருவாக்கிய உருவாக்கிய பிரபல்யம் வாய்ந்த புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் மாணவி ஒருத்திக்கே இக்கதி ஏற்பட்டது சாதாரண விடயமல்ல. இது மாணவர் உலகத்தாலும் சான்றோர்களாலும் மிகவும் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
புங்குடுதீவு மக்களின் சிறப்புச் சின்னமான பூவரசம் பூக்களில் ஒன்று இன்று கசக்கி வீசப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன்னே நிறுத்தவும் இனிமேல் இப்படி நடைபெறாமல் இருக்கவும் கண்டித்துக் குரல் கொடுக்க வேண்டியது அனைத்துத் தமிழ் மக்கள் ஒன்றியங்களினதும் கடமையாகும். அந்த வகையில் எமது டென்மார்க் சைவத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையும் இச்சீரழிவுப் படுகொலைக்கு தனது கண்டனத்தையும் ஆழ்ந்த கவலையையும் பதிவு செய்கின்றது.

ad

ad