புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2015

சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது: சந்திரிக்கா


 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது இரண்டாக பிளவுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கண்டி, மேல்நாட்டு கலை சங்க மண்டபத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவானது அந்தளவுக்கு பாரதூரமானதல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மைத்திரி - சந்திரிக்கா மற்றும் மகிந்த ராஜபக்ச அணி என இரண்டாக பிளவுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என அவரது அணியினர் கட்சியின் தலைமைக்கு பிற கட்சியினர் ஊடாக அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியாது என்ற திட்டவட்டமான முடிவில் இருக்கின்றனர்.

ad

ad