புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2015

கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் எதிர்பார்ப்பு

தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் அவர்களுக்கு சுயாட்சியுடன் கூடிய சம அந்தஸ்துடனான
நியாயமான ஒரு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற உண்மையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு ஒரு உறுதியான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமென்ற அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்ற நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பார்கள் என்று சர்வதேசம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் ஒருபோதும் நாட்டினை பிரிக்கும்படி கூறவில்லை. இந்த நாட்டில் சமஷ்டி ஆட்சிமுறை வேண்டுமென்று கூட நாங்கள் கேட்கவில்லை. மாறாக தமிழ் மக்களுக்கு ஒரு நியாமான அரசியல்தீர்வு அவசியமாகும்.
ஒருநாட்டில் பிரச்சினைகள் தொடர்கதைகளாக இருக்க முடியாது. ஒரு கட்டத்தில் முடிவுகள் வந்தாக வேண்டும். எம்மைப் பொறுத்தவரை அவ்வாறான முடிவு வரவேண்டிய காலம் கனிந்துள்ளது என்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் நாடு தீர்க்கமானதொரு கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அதாவது தமிழ் மக்களுக்கு அவர்களது வரலாற்று ரீதியான பிரதேசங்களில் தீர்வு வழங்கப்பட வேண்டுமென்ற விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையை கூட்டமைப்பின் தலைவர் வெளியிட்டுள்ளார்.

ad

ad