புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2015

ஊழலில் ஈடுபட்ட பிஃபா உயர் அதிகாரிகள்: அதிரடி கைது செய்த சுவிஸ் அரசு


பல மில்லியன் டொலர்களை கையூட்டல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, சர்வதேச கால்பந்து அமைப்பின் ஆறு சிரேஷ்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊழலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சர்வதேச கால்பந்து( பிஃபா) நிர்வாகிகள் 6 பேரை சுவிட்சர்லாந்து அரசு கைது செய்துள்ளது.
சுவிஸின் சூரிச் நகரில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிபாவின் அலுவலகம் இயங்கி வருகிறது. உலகிலேயே மிகபெரிய விளையாட்டு அமைப்பான இதன் தலைவராக, சுவிஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் பிளேட்டர் என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார்.
2018ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து போட்டியை நடந்த ரஷ்யாவுக்கும் 2022ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பினை கத்தார் நாட்டுக்கும் வழங்கப்பட்டதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
அந்த நாடுகளுக்கு சாதகமாக வாக்களிக்க லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டவர்கள் மீது அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்தது.
இந்த ஆதாரங்களை சுவிட்சர்லாந்து பொலிசிடம் அளித்த அமெரிக்க அரசு, அவர்களை கைது செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதற்கிடையே சூரிச் நகரில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள 65வது பிஃபா காங்கிரசில் கலந்து கொள்ள உறுப்பினர்கள் அங்கு குவிந்து கொண்டிருந்தனர்.
இந்த கூட்டத்தில்தான் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் நடைபெறவிருந்தது. இதற்காக சூரிச் நகரில் உள்ள பார் ஆ லாக் ஹொட்டலில் தங்கியிருந்த பிஃபா நிர்வாகிகளில் 6 பேரை சுவிட்சர்லாந்து பொலிசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பெயர் விபரம் வெளியிடப்படவில்லை. எனினும் பிஃபா அமைப்பின் துணைத் தலைவர் ஜெஃப்ரி வெப் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் எனக் கூறப்படுகிறது.
தற்போதைய பிஃபா தலைவர் ஜோசப் பிளேட்டர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad