புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2015



முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தம்பி ராஜா கைது செய்யப்பட்டதாகவும், ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வருகிறது.  

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜா பெரியகுளம் நகராட்சி தலைவராக உள்ளார்.  பெரியகுளம் கோயில் பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கில் மதுரை உயர்நீதி மன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி நாகமுத்துவின் தந்தை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, மணல் கடத்தல், அதிகாரிகளை மிரட்டியது என்ற குற்றச்சாட்டுகளும் ராஜா மீது சுமத்தப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பில்  இருந்தபோது, பல்வேறு துறைகளில் நடந்த அத்துமீறல்கள் குறித்து ரகசிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.  முன்னாள் டிஜிபி அலெக்சாண்டர் தலைமையிலான டீம் இந்த விசாரணையை நடத்துகிறது.  இக்குழுவினர் நடத்திய விசாரணையில், பொதுப்பணித்துறை மற்றும் சுகாதாரத் தறையில் அதிக அளவில் அத்துமீறல்கள் நடந்ததாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதில், ராஜாவின் தலையீடு அதிகம் இருந்ததாகவும், தேனி மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதிச் சான்று வழங்கி யிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதிகாரிகள் மாற்றல் விஷயத்திலும் தலை யீடுகள் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  கடந்த 8 மாதத்தில் 15 ஆயிரம் கோடி அளவிற்கு சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவர் குடும்பத்தார் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, ராஜாவை சென்னைக்கு அழைத்து மூன்று நாட்கள் சென்னையிலேயே இருக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பின்னர், இவர் கைது செய்யப்பட்டு, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வருகிறது. 

பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், எந்த குற்றச்சாட்டில் ராஜா கைது செய்யப்பட் டுள்ளார் என்ற விபரம் தெரியவில்லை.

ஜெயலலிதா, கடந்த 23ம் தேதி பதவியேற்றபோது, திருவேற்காடு கோவிலில் தனது 50-வது திருமண நாளுக்காக அபிஷேக, ஆராதனைகள் செய்தார் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad