புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2015

முன்னாள் அமைச்சருக்கு பிணை

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு குருநாகல் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 

 
இன்றையதினம் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
25ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீர பிணைகளிலுமே அவரை, குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி சுனந்த குமார ரத்னாயக்க விடுதலை செய்துள்ளார்.
 
சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எம்.பி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
 
முன்னாள் அமைச்சருடன் கைதுசெய்யப்பட்ட சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆர்.எம்.ஏ. பெர்ணான்டோ மற்றும் முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மொஹமட் சாகீர் ஆகியோருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ad

ad