புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2015

யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல்! சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை கூட்டமைப்பினர் சந்திப்பு


யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுராதபுரம் சிறைச்சாலையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இன்றைய தினம் மாலை இடம்பெற்ற குறித்த சந்திப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய தினம் மாலை 3.30 தொடக்கம் 4. மணிவரையில் சந்தித்தோம். யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பற்ற நிலையிலும் அவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு 37 மாணவர்கள் உள்ளார்கள். இன்றைய தினம் அவர்களை சந்தித்து முழுமையான தகவல்களை நாம் பெற்றிருக்கிறோம்.
இதனடிப்படையில் நாளைய தினம் ஜனாதிபதி, பிரதமர், சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் ஆகியோரை சந்தித்து நாம் பெற்ற தகவல்களை கையளிக்கவுள்ளோம்.
மேலும் குறித்த வழக்குகள் 1 ம் திகதி தொடக்கம் 4 ம் திகதி வரையில் யாழ்.நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், பொருத்தமான வழக்கறிஞர்களை நியமித்து மாணவர்களுக்கு பிணை அல்லது விடுதலை பெற்றுக்கொடுப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மேலும் குறத்த நீதிமன்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் நிறோசன் என்ற மாணவன் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரையும் நாம் சந்தித்துள்ளோம். இன்றைய தினம் நானும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சென்றிருந்தோம் என்றார்.

ad

ad