புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2015

இசைப்பிரியாவின் வாழ்க்கையைச் சொல்லும் தமிழ்ச் சினிமாவிற்கு சென்சார் மறுப்பு..!

ஈழப் போராட்டத்தின் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அழித்தொழிப்பில் ஒரு சாட்சியமாக தோன்றி, உலக ஊடகவியாலளர்களை திடுக்கிட வைத்த ஈழத்து பெண் ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்திற்கு சென்சார் செய்ய சென்னை மண்டல சென்சார் போர்டு அதிகாரி மறுத்துவிட்டானர்.

இது பற்றி ‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் வெளியிட்டுள்ள அறிக்கை இது :

‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படத்தின் பணிகள் நிறைவுற்று தணிக்கை சான்றிதழ் பெற கடந்த மே 11-ம் தேதியன்று வடபழனி ரவிபிரசாத் ஸ்டூடியோவில் இருந்த பிரிவியூ தியேட்டரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து. தணிக்கை அதிகாரி அடுத்த நாள் வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னதால் அவருக்காக மறுநாள் ஒத்தி வைக்கப்பட்டது.

மறுநாள் மே 12-ம் தேதி காலை 11 மணியில் இருந்து மதியம் 1.40 மணி வரையிலும் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரி திருமதி ஜெயந்தி முரளிதரன் என்னை பேச அழைத்தார்கள்.

எடுத்த எடுப்பிலேயே அவரது பேச்சு சற்று வித்தியாசமாகவும், கோபமாகவும் இருந்த்து. “எங்கே உங்களது தயாரிப்பாளர்..? அவர் வீடு எங்கே இருக்கிறது…?” என்றெல்லாம் விசாரித்தார். நானும் பொறுமையாக, தயாரிப்பாளருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் வரவில்லை என்பதை சொன்னேன்.

படத்தின் விண்ணப்பதாரரும், இயக்குநருமாகிய நான் உடன் இருக்கும்போது அந்த இடத்தில் தயாரிப்பாளர் தேவையே இல்லை என்றாலும் அவரது கோபமான கேள்விக்கு நான் பொறுமையாக பதிலளித்தேன்.

அடுத்ததாக “முதலமைச்சர் உரையை படத்தின் துவக்கத்தில் ஏன் வைத்தீர்கள்..? யார் வைக்கச் சொன்னது..?” என்றார். அதற்கு நானும் பொறுமையாக விளக்கமளித்தேன். மாண்புமிகு அம்மா அவர்கள் ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் குரலாக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் இந்தப் படத்தின் கதைக் கருவுக்கு ஏற்றதாகவும், இசைப்பிரியாவின் கொடூரமான கற்பழிப்பும், இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலை பற்றியும் விரிவாக மாண்புமிக அம்மா அவர்களின் சட்டமன்ற உரையில் இருப்பதைச் சுட்டிக் காட்டினேன்.

ஆனால், மாண்புமிகு அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் வாசித்து நிறைவேற்றிய முதல் தீர்மானத்தை அவமானப்படுத்தும்வகையில் “நட்பு நாட்டை பற்றியும், அதன் ராணுவ வீரர்கள் பற்றியும் எப்படி அவதூறாக பேசலாம்..? சொல்ல்லாம்..? அது தவறானது..” என்று வாதிட்டார் அதிகாரியான திருமதி ஜெயந்தி.

அப்போது நான் குறுக்கிட்டு, “நட்பு நாடு என்று எப்படி சொல்கிறீர்கள்..? நட்பு நாடு இலங்கை என்றால் நமது எதிரி நாடு எது..? எல்லா நாடுகளுமே நமக்கு நட்பு நாடுகள்தான். ஆனால் நட்பு நாடு என்று சொல்லிக் கொண்டு அப்பாவி தமிழர்களை கொலை செய்த்தும், தமிழ்ப் பெண்களை கற்பழித்த்தும் நியாயமா?” என்று திருப்பிக் கேட்டேன்.

“அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது…” என்றார். “சேனல்-4, பிபிசி மற்றும் இந்திய ஊடகங்களில் வந்த அனைத்து ஆதாரங்களின் அடிப்படையில்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஆதாரமே மாண்புமிகு அம்மா அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம்தான்.  இதுவே இலங்கை அரசின் கொடூரமான செயலை கண்டித்துதான்..” என்பதை விளக்கினேன்.

அப்படியிருந்தும் திருமதி ஜெயந்தி அவர்கள், “இலங்கை நம்முடைய நட்பு நாடு, அந்நாட்டு ராணுவத்தை தவறாக சித்தரிப்பதால் இந்தப் படத்திற்கு தணிக்கை கிடையாது. இது பற்றி நாங்கள் மும்பையில் உள்ள தணிக்கை முதன்மையாளருக்கும் உயரதிகாரிகளுக்கும் கடிதம் எழுதுவோம்…” என்றார்.

நான் மறுபடியும் அவரிடம், “நீங்கள் ரீவைஸிங் கமிட்டிக்கு பரிந்துரை செய்யுங்கள். அவர்கள் இதை தீர்மானிக்கட்டும். அதன் பிறகு வேண்டுமானால் உங்கள் விருப்ப்ப்படி மும்பைக்கோ, டெல்லிக்கோ FACT Tribunal-க்கு செல்கிறேன்..” ஏன்றேன். ஆனால் தணிக்கையாளர் திருமதி ஜெயந்தி இதற்கு முற்றிலுமாக மறுத்துவிட்டார்.

வரும் 18-ம் தேதி இசைப்பிரியா இறந்த நாளில் இந்தப் படத்தினை வெளியிடலாம் என்கிற எண்ணத்தில் இருந்தோம். அது முடியாமல்போய்விட்டது என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஊடகவியலாளர் இசைப்பிரியாவுக்கு நடந்த கொடூரங்களையும், அதன் உண்மைகளையும் உலகத்திற்கு எடுத்தரைக்க முனைந்தது தவறா..?”

இவ்வாறு அந்த அறிக்கையில் கேட்டிருக்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளரான குருநாத் சல்சானியும், இயக்குநரான கு.கணேசனும்..!

ஈழம் என்றாலே பிரச்சினைதான். சென்சிட்டிவ் மேட்டர் என்பதாலும், தற்காலிகமாக முன்னாள் சென்சார் போர்டு அதிகாரியான பக்கிரிசாமிக்கு பதிலாக புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் திருமதி ஜெயந்தி முரளிதரன் மேலிடத்தைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்திருப்பதாலும் அனுமதி கொடுக்கும் பொறுப்பை மும்பைக்கு தள்ளிவிட்டிருக்கிறார் என்பதும் புரிகிறது..!

இந்தியா ஒரு ஜனநாயக நாடுன்னு யாரோ சொல்றாங்க..

ad

ad