புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2015

பொலிஸாரின் பிழையே வடக்கில் வன்முறை வெடிக்கக் காரணம்!- புலனாய்வுப் பிரிவு


பொலிஸாரின் பிழையே வடக்கில் வன்முறை வெடிக்கக் காரணம் என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்று வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் ஒருவரை கைது செய்து, விடுதலை செய்தமையே இந்த பிரச்சினைக்கான காரணமாகும்.
உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் உத்தரவிற்கு அமைய கைது செய்யப்பட்ட நபர் விடுதலை செய்யப்பட்டார்.
இதனால் மக்கள் பொலிஸார் மீது நம்பிக்கையிழந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி தொடர்ந்தும் பதவியில் நீடித்து வருகின்றார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றிய உயர் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் செல்வாக்குடையவர் எனவும் அவர் செல்வாக்கை பயன்படுத்தி நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார் எனவும், இதுவே பிரச்சினைகள் ஏற்படக் காரணம் எனவும் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ad

ad