புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2015

ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஜெயலலிதா: புதிய அமைச்சர்களின் பட்டியலையும் வழங்கினார்



அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக ராஜ்பவனில் உள்ள ஆளுநர் ரோசய்யாவை வெள்ளிக்கிழமை மதியம் சந்தித்தார். அப்போது கட்சி எம்எல்ஏக்களின் கையெழுத்துப் பெற்ற ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். அத்துடன் புதிய அமைச்சர்களுக்கான பட்டியலையும் அளித்தார்.

இந்த சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 7 மணிக்கு நடந்த கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா பெயரை ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிய நத்தம் விஸ்வநாதன் வழிமொழிந்தார். 

அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவர் பதவியில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம், முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தற்கான கடிதத்தை ஆளுநர் ரோசய்யாவிடம் வழங்கினார். இதையடுத்து ஆட்சி அமைக்குமாறும், புதிய அமைச்சரவை பட்டியலை அளிக்குமாறும் ஆளுநர் ரோசய்யா ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்தார்.

ad

ad