புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2015

ஜெ. வருகையால் அண்ணா சாலை ஸ்தம்பிப்பு: பயணிகள் கடும் அவதி! (படங்கள்


ஆளுநர் மாளிகையில் இருந்து அண்ணா சாலைக்கு ஜெயலலிதா வந்ததால், அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
போயஸ் கார்டனில் இருந்து இன்று பிற்பகல் 1.28 மணிக்கு காரில் புறப்பட்ட ஜெயலலிதா, ஆளுநர் மாளிகைக்கு சென்றார். ஆளுநருடன் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல், தான் ஆட்சியமைக்கப்போவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் அங்கிருந்து ஜெயலலிதா கார் கிண்டி, வள்ளுவர் கோட்டம், ஸ்டெர்லிங் ரோடு ஆகிய பகுதிகளில் இருந்து அண்ணாசாலை செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கிண்டியில் சுமார் 5000க்கும் அதிகமான இரு சக்கர,, நான்கு சக்கர வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தன.

பேருந்தில் பயணிகள் படிகளில் தொங்கிக்கொண்டே சென்றனர். ஆனால், இதை ஒழுங்குபடுத்த காவல்துறை இல்லாததால் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர்.

அதிமுக தொண்டர்களையும், நிர்வாகிகளையும் வழிநடத்துவதில் கவனம் செலுத்தும் காவல்துறை பொதுமக்கள் நலனில் அக்கறை காட்டத் தவறிவிட்டது என்று பொதுமக்கள் வேதனையுடன் கூறினர்.

இருசக்கர வாகன ஓட்டு ஒருவர் கூறுகையில், "கிண்டியில் இருந்து பைக்கில் ஜெமினி பாலம் வருவதற்கு மட்டும் 2 மணி நேரம் ஆகிவிட்டது. இனி, சிம்சன் வரை செல்ல வேண்டும். இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியவில்லை. அலுவலகத்தில் செல்போன் மூலம் பேசி பர்மிஷன் கேட்டிருக்கிறேன்" என்று புலம்பினார்.

மேலும், சென்னையில் வெயிலின் தீவிரம் மிகுதியான நிலையில், ஜெயலலிதா வருகையையொட்டி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், கிண்டி முதல் சிம்சன் வரை பயணிகள், வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். சென்னை அண்ணாசாலையே போக்குவரத்து நெரிசலால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

ad

ad