புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2015

ஜெ. வழக்கில் மேல்முறையீடு செய்வீர்களா? கர்நாடக அமைச்சர் பதில்!



ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீடு தொடர்பாக முடிவு எடுக்க சில நாட்கள் தேவைப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடக அமைச்சர் ஜெயச்சந்திரா இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், மேல்முறையீடு தொடர்பாக அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா, அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார் ஆகியோரின் அறிக்கை பெறப்பட்டுள்ளது. இதன் மீது விவாதித்து முடிவு எடுக்க சில தினங்கள் தேவைப்படும் என்றார்.

இதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுமா என்ற கேள்விக்கு, அறிக்கைகளை ஆராயந்த பின்னரே அதன் மீது முடிவு எடுக்கப்படும் என்றார். 

மேல்முறையீடு தொடர்பாக கர்நாடக அரசுக்கு அம்மாநில அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்மகுமார் கடிதம் எழுதியுள்ளார். சட்டத்துறை செயலாளருக்கு அவர் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பரிந்துரை பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. இந்தக் கடிதத்தின் நகல் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பதிவாளருக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

இந்த வழக்கு தொடர்பாக கர்நாடக அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்த அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டுக்கு உகந்தது என்று பரிந்துரை செய்திருந்தார். தற்போது அரசு தலைமை வழக்கறிஞர் கடிதம் எழுதியிருந்ததை தொடர்ந்து, அம்மாநில சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா, தனது துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இதனிடையே கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் வரும் 21ஆம் தேதி கூடுகிறது என்றும், அன்றைய தினம் தலைமை வழக்கறிஞரின் கடிதம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. 
 

ad

ad