புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மே, 2015

மரண தண்டனைக்கு பின்னர் இந்தோனேசிய தூதுவரின் அறிக்கை
அவுஸ்திரேலியாவின் நல்ல உறவு இந்தோனேசியாவிற்கு மிகவும் முக்கியம் என இந்தோனேசியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியப் பிரஜைகளான மயூரன்- அன்ட்ரூசான் ஆகியோருக்கு இந்தோனேசியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில், அந்நாட்டு மக்களிடையே பல்வேறு கருத்துக்கள் வெளிவந்துள்ளன. இது தொடர்பில் இந்தேனேசியாத் தூதுவர் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
1. பாலி ஒன்பது போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவர்களுக்கு எதிராக அமுலாக்கப்பட்ட சட்டநடவடிக்கைகள் குறித்து மக்கள் மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கம் வெளிப்படுத்தும் கருத்துக்களை இந்தோனேசியா புரிந்து கொண்டுள்ளது.
2. இந்தோனேசியா அரசாங்கமும்,நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும்,நண்பர்களுக்கும் தங்கள் அனுதாபங்களை வெளிப்படுத்தியுள்ளது.
3. இந்தோனேசியா, அவுஸ்திரேலியா உறவிற்கு இது ஒரு கடினமான மற்றும் சவாலான காலமாகும்.
4. அவுஸ்திரேலியாவின் நல்ல உறவு இந்தோனேசியாவிற்கு மிகவும் முக்கியம். இந்தோனேசியாவுடனான நல்ல உறவு அவுஸ்திரேலியாவிற்கும் அவசியம் என்று நாங்கள் நம்புகின்றோம். இரு தரப்பு உறவுகளையும் மேம்படுத்தி வலுவடைய செய்வதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா மக்களுக்கு இடையே தற்பொழுது தனிப்பட்ட, கலாச்சார, வணிக மற்றும் கல்வி இணைப்புகள் வலுவாக உள்ளதென நாம் நம்புகின்றோம்.
5. இருதரப்பு உறவுகளை மீள்கட்டமைப்பு செய்வது முக்கியமாகும். புறநிலை ஊடக தகவல் மற்றும் அறிக்கைகளில் எங்களுக்கு தொடரந்து ஆதரவு அவசியம். அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா மக்களுக்கு இடையில் தவறான காரணங்களினால் காணப்படுகின்ற இடைவெளியினை நீக்குவதற்கு ஊடகங்களின் பங்களிப்புகள் மதிக்கத்தக்கதாகும்.
என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ad

ad