புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2015

உலகநாடுகள் படை நடத்திய வான்வழி தாக்குதலில் 10 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

சிரியா, ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான உலகநாடுகள் படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 10 ஆயிரம் ஐ.எஸ். தீ
விரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம்

ஈராக்கில் கடந்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கி சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா முஸ்லிம் அரசு படையினருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி, தாக்குதல்கள் தொடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் 9–ந் தேதி அவர்கள் அதிரடியாக நாட்டின் 2–வது பெரிய நகரமான மொசூலை தங்கள் பிடியின்கீழ் கொண்டு வந்தனர். அதைத் தொடர்ந்து மேலும் தாக்குதல்கள் தொடுத்து நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி நகரங்களை கைப்பற்றினர்.

சிரியாவிலும் இதேநிலையே நீடித்தது. ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள்வசம் பலநகரங்களை கொண்டுவந்தனர். ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் தாங்கள் கைப்பற்றிய நிலப்பரப்பை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இஸ்லாமிய தேசமாக அறிவித்தனர்.    தொடர்ந்து அவர்கள் முன்னேறினர். இந்நிலையில் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஈராக்கும், குர்திசும் தொடர்ந்து வலியுறுத்தியது.

ஒபாமா உத்தரவு

இந்த நிலையில், ஈராக்கில் அமெரிக்கர்களைப் பாதுகாக்கவும், சிறுபான்மையினர் நலனைக் காக்கவும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை குறி வைத்து வான்வழி தாக்குதல் நடத்த உத்தரவிட்டு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி அதிரடியாக அறிவித்தார்.

ஈராக் மற்றும் குர்திஷ் படைகளுக்கு ஆதரவாக வான்வழி தாக்குதல் நடத்தப்படும். அதே நேரத்தில் ஈராக்கில் தரைவழியில் தாக்குதல் நடத்துவதற்கு துருப்புக்களை அனுப்பி வைக்கப்படாது. ஈராக்குடன் இன்னுமொரு போர் புரியவும் விருப்பம் இல்லை என்று ஒபாமா கூறினார். 

உலகநாடுகள் அதிரடி தாக்குதல்

இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களிடம் பிணைய கைதியாக சிக்கியுள்ளவர்களை தலையை துண்டித்து கொன்று வெறியாட்டம் ஆடினர். 

இதனையடுத்து ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தாக்குதல் தொடுத்து வருகிறது. அப்போது சிரியாவின் மீது அமெரிக்கா மற்றும் அதன் அரபு கூட்டாளிகள் பார்வை திரும்பியது. சிரியாவிலும் அமெரிக்காவும், அரபு நாடுகளும் கூட்டாக வான்வழி தாக்குதலை தொடங்கியது.

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் வலுவாக இருந்த ரக்கா உள்பட பல்வேறு பகுதிகளில் அமெரிக்காவும், அதன் அரபு கூட்டாளிகளும் வான்வழி தாக்குதல்கள் நடத்தியது. தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான உலக நாடுகள் படை சிரியா மற்றும் ஈராக்கில் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீண்டும் அதிரடி

சமீபத்தில் ஈராக்கில் அன்பார் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மேலும் ஒரு நகரை பிடித்தனர். சிரியா–ஈராக் இடையேயான கடைசி எல்லையையும் அவர்கள் கைப்பற்றினர்.

ஏறத்தாழ 18 மாதம் நடத்திய சண்டைக்கு பின்னர் அந்த மாகாணத்தின் தலைநகரான ரமாடி நகரை கடந்த ஏப்ரல் மாதம் 17–ந் தேதி கைப்பற்றினர். இது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்க கூட்டு படையினருக்கு பெருத்த பின்னடைவு என்று அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

இதற்கிடையே சிரியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பால்மைரா நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். சிரியாவில் பல்மைரா என்னும் வரலாற்று சிறப்புமிக்க நகரை கைப்பற்றி நிலையில், சிரியா–ஈராக் இடையேயான கடைசி எல்லையையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்தது அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து உலக நாடுகள் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்த திட்டம் தீட்டி வருகிறது.

10 ஆயிரம் தீவிரவாதிகள் பலி

சிரியா, ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான உலகநாடுகள் படை நடத்திய வான்வெளி தாக்குதலில் இதுவரையில் 10 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அமெரிக்கா அதிகாரி பலின்கென் தெரிவித்து உள்ளார். 

இருப்பினும் அவர் இப்போரில் பலியான பொதுமக்கள் எத்தனை பேர் என்பதை தெரிவிக்கவில்லை. ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, தீவிரவாதிகள் தொடர்ந்து இயக்கத்திற்கு ஆள்சேர்த்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதற்கிடையே சிரியாவின் வடகிழக்குப்பகுதியில் முன்னேறிய ஐ.எஸ். தீவிரவாத படையை குர்திஷ் படை தடுத்து நிறுத்திஉள்ளது. குர்திஷ் படை அமெரிக்க ராணுவ உதவியுடன், முக்கியமான நகரங்கள் மற்றும் கிராமங்களை திரும்ப அடைந்து உள்ளது. துருக்கி எல்லையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள தெல் அப்யாத் நகரை நோக்கி குர்திஷ்படை சென்றுக் கொண்டு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

ad

ad