புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2015

ஆசாராம் பாபுவின் ஜாமின் மனு விசாரணை: 
நான்காவது முறையாக சுப்பிரமணிய சாமி ஆஜராகவில்லை


ஆசாராம் பாபுவின் ஜாமின் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அவரது வக்கீலாக ஆஜராக இருந்த சுப்பிரமணிய சாமி ஆஜராகாததால் மறுவிசாரணை நாளை (17-ம் தேதிக்கு) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபு (73) தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார்.  அதில், கடந்த 2001 மற்றும் 2006-க்கு இடைப்பட்ட காலங்களில் ஜோத்பூரில் உள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் இச்சம்பவம் நடைபெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார் ஆசாராம் பாபுவை கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்தனர். தற்போது ராஜஸ்தான் மாநில சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.  அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 5 ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஆசாராமின் சார்பில் ஆஜராவதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், பிரபல வழக்கறிஞருமான சுப்பிரமணிய சாமி ஆசாராமை பாபுவை கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி சிறையில் சந்தித்தார். அவரை ஜாமினில் விடுவிக்கப் போவதாக அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுப்பிரமணிய சாமி, ஜோத்பூர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி ஆசாராம் பாபு சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு மீதான வாதப் பிரதிவாதம் நடைபெறவிருந்த கடந்த 26-ம்தேதி ஆசாராம் பாபுவின் வக்கீலான சுப்பிரமணிய சாமி கோர்ட்டில் ஆஜராகாததால் அந்த ஜாமின் மனுவின் மீதான மறுவிசாரணை ஜூன் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றும் சுப்பிரமணிய சாமி கோர்ட்டில் ஆஜராகதையடுத்து கடந்த 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

கடந்த 9-ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோதும் சுப்பிரமணிய சாமி கோர்ட்டில் ஆஜராகாததால் மீண்டும் மறுவிசாரணை 16-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. அவர் தொடர்ந்து ஆஜராகாதது குறித்து ஆசாராம் பாபுவிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். 

அதற்கு பதில் அளித்த அவர், ’சுப்பிரமணிய சாமி ஒரு நல்ல மனிதர். அவர் நிச்சயமாக வருவார். இதைப்பற்றி யாரும் கேள்வி எழுப்ப கூடாது’ என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தொடர்ந்து நான்காவது முறையாக இன்று இந்த ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. இன்றும் சுப்பிரமணிய சாமி ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து ஆசாராம் பாபுவின் பழைய வக்கீலே இந்த ஜாமின் மனு விசாரணையின்போது ஆஜராவார் என்று கோர்ட்டில் இன்று தெரிவிக்கப்பட்டது.  இதையேற்ற நீதிபதி, ஆசாராம் பாபுவின் ஜாமின் மனு தொடர்பான மறு விசாரணையை நாளை (17-ம் தேதிக்கு) ஒத்திவைத்துள்ளார்.

ad

ad