புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2015

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கிக்கு மீளச் செலுத்தாத நிலையில் 200 கோடி ரூபா கடன்


* 15 பேருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்
* நிதி மோசடிப் பிரிவு நடவடிக்கை
கடற்றொழிலுக்கென கடன் பெற்று

 

லங்காபுத்ர அபிவிருத்தி வங்யிலிருந்து 200 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தைக் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாதுள்ள 15 கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 750 லட்சம், 1000 லட்சம் ரூபா என்ற வகையில் கடன் பெற்ற வர்த்தகர்களில் சிலர் ஒரு தவணைக் காசையாவது செலுத்தாது இருப்பதாக வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடற்றொழில் நடவடிக்கைக்கென கூறி ஒருவர் பெற்ற கடனை கடற்றொழில் நடவடிக்கையில் இடாமல் வேறு சட்டவிரோத நடைமுறைக்குப் பயன்படுத்தி உள்ளாரா? என விசாரணை மேற் கொள்ளப்படுகிறது.
பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அரசியல்வாதிகள் மேற்கொண்ட அரச சொத்துக்கள் கொள்ளை தொடர் பாக மட்டும் விசாரணை செய்வதாக குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் இந்த விசாணைகள் முன்னெடுக்கப்படுவதால் அரசியல்வாதிகளை மாத்திரம் (பிவியிளி) விசாரணை செய்வதாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் பொய்யாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மறைக்கப்பட்ட, சட்டவிரோத நடவடிக்கைக்கு இந்தக் கடன் தொகை பயன்படுத்தப்பட்டதா? எனவும் விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த வங்கிக்கு கடன் தொகையை வழங்குவதற்கு நிதி அமைச்சின் எந்த அதிகாரியாவது ஆலோசனை வழங்கியு ள்ளார்களா? என்பதும் குறித்து இவ் விசாரணை மூலம் வெளியாகும். கட னைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கவும் அரசு தீர்மானித்துள்ளது. கடன் தொகையைத் திருப்பிப் பெற சகல நடவடிக்கை களும் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த உயர் அதிகாரி தெரிவித்தார். 

ad

ad