புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2015

ரொறன்ரோ நகரத் தலைவர் திரு. யோன் ரோறி அவர்கள் தமிழ்த் தெரு விழா நிகழ்வின் அறிவிப்பை வெளியிட்டார். ஆகத்து மாதம் 29 மற்றும் 30ஆம் நாள் இடம்பெறும் நிகழ்வில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பர்.









ஆசியாவுக்கு வெளியே முதலாவது தமிழ்த் தெரு விழா பற்றிய அறிவிப்பு நிகழ்வு உற்சாகத்தையும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆசியாவுக்கு வெளியே முதலாவது தமிழ்த் தெரு விழா பற்றிய அறிவிப்பு கடந்த செவ்வாய்க் கிழமை மாலை 7:00 மணியளவில் மார்கம் கொண்வென்சன் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. ரொறன்ரோ நகரத் தலைவர் திரு. யோன் ரோறி அவர்கள் தமிழ்த் தெருவிழா நிகழ்வின் அறிவிப்பை வெளியிட்டதோடு நிகழ்விற்கான தனது பலத்த ஆதரவையும் தெரிவித்தார்.
ஓன்ராறியோ மாகாண முதல்வர் மதிப்புக்குரிய கத்தலின் வின் அவர்கள் நேரில் வர இயலாதபோதிலும் காணொளிவாயிலாகத் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்ததார். தமிழ்த் தெருவிழா 2015 ஊடாக நாம் அனைவரும் இணைந்து ஒன்ராறியோவின் பல்கலாச்சாரத் தன்மையைக் கொண்டாடுவதோடு அனைவரையும் உள்வாங்கிய பல்கலாச்சாரக் குமுகத்தைக் கட்டியெழுப்பவும் முடியும் என அவரது செய்தியிற் தெரிவித்தார்.
தமிழரின் மிகச் சிறப்பு மிக்க மரபு,கலை, பண்பாடு, உடை, உணவுமற்றும் வரலாறு போன்றவற்றை முன் நிறுத்தி வேற்றின மக்களும் பங்கேற்கும் வகையில் இத் தமிழ்த் தெருவிழா ஏற்பாடாகி வருகிறது. தொடர்ந்து வரும் ஆண்டுகளிற் கனடா மற்றும் அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளிருந்தும் மக்களைப் பெருமளவில் பங்கேற்கச் செய்யும் வகையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கும் விழா மரபு மற்றும் நவீன கலைகள், உணவு வகைகள், பொழுது போக்கு நிகழ்வுகள் போன்றவற்றை உள்ளடக்கி அனைத்து அகவையினருக்கும் ஏற்றவகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் சில கீழ்வருமாறு:
 •தமிழ் இசைக் கச்சேரி
 •உள்ளுர்த் தமிழ்க் கலைஞரின் ஆற்றல்களை வெளிப்படுத்தும்  
 நிகழ்ச்சிகள்
 •கனடியத் தமிழர் வரலாற்றுக் காட்சிக்கூடம்
 •தமிழ்த் தெருக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மரபுக் கண்காட்சிகள்
 •தமிழர் மரபுகளைஅடையாளப்படுத்தும் உணவுகள்
 •குழந்தைகளுக்கும் இளையோருக்குமான களியாட்டங்கள் மற்றும்  
 கண்காட்சிகள்
 • இவை போன்று இன்னும் பல!
  
         

ad

ad