புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூன், 2015

4 கிலோ தங்க சட்டை அணிந்து வந்த தொழிலதிபர்

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் பங்கஜ் பராக். பள்ளி படிப்பு வரை படித்துள்ள இவருக்கு இன்று 45-வது gs_2428722f-364x245பிறந்தநாள். இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற இவரது தம்பியின் திருமண நிகழ்ச்சியில் 4 கிலோ எடையில் தயாரிக்கப்பட்ட தங்க சட்டை அணிந்து கலந்து கொண்டார். இவரை கண்டதும், திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் ஆச்சர்யத்தோடு இவருடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். மேலும் பலர் தங்களது செல்போன்களில் ‘செல்பி’ எடுத்து கொண்டனர்.
பின்னர் பங்கஜ் பராக்
செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எனக்கு சிறு வயதிலிருந்தே தங்கம் மீது அலாதி பிரியம். எப்போதும் நான் 3 கிலோவுக்கு குறையாமல் தங்க நகைகளை அணிவது வழக்கம்.
தற்போது கூட நான் 3 கிலோ தங்க நகைகளை அணிந்துள்ளேன். எனது மூக்கு கண்ணாடி கூட 30 கிராம் எடையில் செய்யப்பட்டது. எனது 45-வது பிறந்தநாள் வெள்ளிக்கிழமை (இன்று) வருகிறது. இதற்காக சுமார் ரூ. 1 கோடி செலவில் தங்க சட்டை தைத்து அணிந்து கொள்ள முடிவு செய்தேன். ஆனால் ஒரு நாள் முன்னதாக எனது தம்பியின் திருமணம் நடைபெறுவதால் இதற்காக இந்த சட்டையை அணிந்து கொண்டேன், என்றார்.

ad

ad