புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2015

இந்தியா அசத்தல்: முதல் இன்னிங்சில் 462 ஓட்டங்கள் குவிப்பு



வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 462 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டுக்கு அணிக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி பதுல்லாவில் நடக்கிறது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கி விளையாடி வரும் இந்திய அணிக்கு முரளிவிஜய், ஷிகர் தவான் சிறப்பான தொடக்கம் தந்தனர்.
இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 239 ஓட்டங்களை குவித்தது. தவான் (150), முரளி விஜய் (89) களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் 2வது நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 3வது நாள் ஆட்டத்தில் விளையாடிய தவான் 173 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ரோஹித் சர்மா (6), அணித்தலைவர் விராட் கோஹ்லி (14) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து விளையாடிய முரளி விஜய் சதம் அடித்தார். அவர் 150 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சஹா 6 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, நிதானமாக விளையாடி வந்த ரஹானே 98 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.
103.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 462 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, அணித்தலைவர் விராட் கோஹ்லி டிக்ளேர் அறிவித்தார். ஹர்பஜன் (7), அஸ்வின் (2) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து வங்கதேசம் தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தமிம் இக்பால் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
25 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு வங்கதேசம் 102 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இம்ருல் காயீஸ் (53) அரைசதம் கடந்தும், மொமினுல் ஹயூ 29 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

ad

ad