புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2015

பார்சிலோனா 5வது முறை சாம்பியன் வென்றது




பெர்லின் நகரில் நடைபெற்ற இந்த இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் பார்சிலோனா அணியும், இத்தாலியின் யூவெண்டஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கிய 4வது நிமிடத்திலேயே பார்சிலோனா அணி நடுக்கள ஆட்டக்காரர் Rakitić கோல் அடித்து அசத்தினார். இரண்டாவது பாதியில் 55வது நிமிடத்தில் யூவெண்டஸ் அணியின் முன்கள ஆட்டக்காரர் Morata ஒரு கோல் அடிக்க ஆட்டம் சமநிலை அடைந்தது. 

தொடர்ந்து 68வது நிமிடத்தில் பார்சிலோனா அணி நட்சத்திர வீரர் சவுரஸ் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் இறுதியில் கிடைத்த கூடுதல் நேரமான 97வது நிமிடத்தை பயன்படுத்தி பார்சிலோனா அணி வீரர் நெய்மர் மற்றொரு கோல் அடித்ததில் 3-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணி அபார வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக சாம்பியன்ஸ்லீக் கால்பந்து கோப்பையை தட்டிச் சென்றது.


சாம்பியன் பட்டம் வென்ற பார்சிலோனா அணிக்கு 412 கோடி ரூபாய் பரிசுத்தொகையுடன், சாம்பியன்ஸ்லீக் கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும், இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா அணி இந்த ஆண்டிற்கான ‘பிபா’ உலக கோ

ad

ad