புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2015

கழிவு எண்ணெய் தாக்கம்: 5 வருடங்களின் பின்னரே சுன்னாகம் நீரை பயன்படுத்தலாம்!

கழிவுஓயில் கலந்த சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள கிணற்று நீரை சுமார் 5 வருடங்களின் பின்னரே பயன்படுத்தலாமென்ற
அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் இ.தேவநேசன்.
அதுவரையில் குறித்த கிணறுகளில் இருந்து பெறப்படும் நீர்மாதிரிகளை தொடர்ச்சியான ஆய்விற்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சுகாதார வைத்திய அதிகாரிகளிற்கு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதங்களை சுகாதார வைத்திய அதிகாரிகளிற்கு கடந்த 8ம் திகதி அனுப்பியுள்ளார்.
சுன்னாகம் பிரதேசத்தை அண்டிய பகுதி கிணற்றுநீர்களில் கழிவு எண்ணெய் கலந்துள்ளது அனைவரும் அறிந்ததே. இந்த விவகாரம் பெரும் பூதாகாரமாகி பிறகு அடங்கிவிட்டது.
இந்த பகுதிகளில் உள்ள கிணற்றுநீர் தொடர்பில் தொடர்ச்சியான அவதானிப்பில் இருப்பதற்கும், மூன்று மாதங்களிற்கு ஒருமுறை கிணற்றுநீர்களை ஆய்விற்குட்படுத்தவும் நடவடிக்கையெடுக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
உடுவிலில் 15 நிர்மாதிரிகள், தெல்லிப்பழையில் 10 நீரிமாதிரிகள், சண்டிலிப்பாய், கோப்பாய், சங்கானை பகுதிகளில் தலா 5 நீர்மாதிரிகள் பெறப்பட்டு ஆய்விற்குட்படுத்தப்பட வேண்டும்.
இந்த ஆய்வுகளிற்கான செலவினங்களை அந்தந்த பிரதேசசபைகளுடன் கலந்துரையாடி பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, அடுத்த ஐந்து வருடங்களிற்கு அந்த நீரை மக்கள் பயன்படுத்தவே கூடாதென்றும், இந்த விடயத்தில் மக்கள் விழிப்புடனிருக்க வேண்டுமென்றும் கூறினார்கள்.

ad

ad