புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2015

‘8,000 மைல் தூரம் விமான சக்கரத்தில் ஒளிந்து பயணம்’ கிழே விழுந்தவர் உயிரிழப்பு, மற்றொருவர் உயிர் ஊசல்


பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் சக்கரப்பகுதியில் ஒளிந்து பயணம் செய்தவர் கிழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென் ஆப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னர்ஸ்பர்க்கில் இருந்து பிரிட்டனின் ஹீத்ரோ விமானநிலையத்திற்கு பிரிட்டன் ஏர்வேசுக்கு சொந்தமான போயிங் 747-ரக விமானம் கடந்த புதன்கிழமை மாலையில் புறப்பட்டு சென்றது. விமானம் சுமார் 11 மணி நேரத்திற்கு மேலாக பயணம் செய்து ஹீத்ரோவை சென்று அடைந்தது. இந்நிலையில் பிரிட்டன் தலைநகர் லண்டனின் ரிஷ்மாண்ட் நகரில் உள்ள ஆடை தொழிற்சாலையின் மீது ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். ஜோகன்னர்பார்க்கில் இருந்து ஹீத்ரோ சென்ற விமானத்தின், சக்கரப்பகுதியில் ஒளிந்து இருந்து பயணம் செய்தபோது விழுந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதே விமானத்தில் இதுபோன்று விமானத்தின் சக்கரப்பகுதியில் பயணம் செய்த மற்றொரு நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அவர் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணையும் நடைபெற்று வருவதாகவும் பிரிட்டன் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

புதன்கிழமை மாலையில் போயிங் ரக விமானம் ஜோகன்னர்ஸ்பார்க்கில் புறப்படுவதற்கு முன்னதாகவே இருவரும், விமானம் பறக்கதொடங்கியதும், சக்கரம் தங்களுக்கு இடையூறு ஏற்படுத்திவிடாத வண்ணம் உள்ளே பாதுகாப்பாக சென்று இருந்து உள்ளனர் என்று கூறப்படுகிறது. விமானம் புறப்பட்டு சென்று லண்டன் அடையும் வரையிலும் இருவரும் பாதுகாப்பாக இருந்து உள்ளனர் என்பது தெரியவந்து உள்ளது. ஜோகன்னர்ஸ்பார்க்கில் இருந்து புறப்பட்டு சுமார் 11 மணிநேரத்திற்கு மேலாக, சுமார் 8000 ஆயிரம் மைல் தூரம் இருவரும் விமானத்தின் சக்கரத்திற்கு உள்ளே உள்ள பகுதியில் இருந்து பயணம் செய்து உள்ளனர்.
மிகவும் மோசமான வானிலையிலே இருவரும், அப்பகுதியில் இருந்து பயணம் செய்து உள்ளனர்.

விமானம், ரிஷ்மாண்ட் நகரில் பயணம் செய்தபோது சுமார் 1,400 அடி உயரத்தில் பயணம் செய்து உள்ளார் என்று விமானத்தின் டேட்டாக்கள் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக ஸ்காட்லாந்து யார்டு போலீசார் செய்தியாளர்களிடம் பேசுகையில், 18-ம் தேதி காலை 9:35 மணியளவில் ரிஷ்மாண்ட் நகரில் இருந்து போலீசுக்கு தகவல் கிடைத்தது, அப்பகுதியில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ரிஷ்மாண்ட்டில் தொழிற்சாலையின் மீது கிடந்த சடலத்தினை ஆய்வு செய்ய லண்டன் ஆம்புலன்ஸ் சர்வீஸ் அதிகாரிகள் அங்கு உடனடியாக விரைந்து சென்றனர். அவருடைய மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை. இருப்பினும், பிரேத பரிசோதனைக்கு பின்னரே எதுவும் தெரியவரும். வாலிபரின் உயிரிழப்பிற்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. என்று கூறிஉள்ளனர்.

இதற்கிடையே விமானத்தில் இதுபோன்று பயணம் செய்தவர் உயிர்பிழைத்து உள்ளார். இதுமிகவும் அரிதான சம்பவம் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்து உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பயணம் செய்த போயிங் 747 விமானத்தில் உயிரிழந்த நிலையில் வாலிபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார். இதே மாதம் அங்கோலாவில் இருந்து பிரிட்டன் சென்ற,  பிரிட்டிஷ் ஏர்வேசுக்கு சொந்தமான விமானத்தில் இருந்து விழுந்த வாலிபர் உயிரிழந்தார். கடந்த 2013-ம் ஆண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றது. இஸ்தான்பூல் நகரில் இருந்து ஹீத்ரோவிற்கு சென்ற விமானத்தின், சக்கரப்பகுதிக்குள் ஒளிந்து பயணம் செய்தவர் கிழே விழுந்து பயணம் செய்தவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ad

ad