புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூன், 2015

சிறைப்படிகள் நீதிமன்றபடிகளை தேடி எம் தாய்மாரை அலைய விட்ட பாவிகள் இன்று அலைகின்றனர் விதி பழி விடுமா .மகிந்தாவின் மனைவி நீதிமன்றில்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று ஆஜராகியுள்ளார்.
கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்ட அறிவிப்பு ஆணைக்கு அமைய அவர் இன்று விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
கால்டன் சிறிலியசவிய திட்டம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஷிரந்தி ராஜபக்சவை ஆஜராகுமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அறிவித்திருந்தது.
ஷிரந்தி ராஜபக்ச வாக்குமூலம் வழங்குவதற்காக தனது கணவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பிரத்தியேக இடம் ஒன்றில் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகளை சந்திக்க புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச அரசியலில் ஈடுபடவில்லை எனவும் அதிகமாக குழந்தைகள் சம்பந்தமான மனிதாபிமான பணிகளில் அவர் கவனத்தை செலுத்தியதாகவும் ஷிரந்தியின் ஊடக இணைப்பாளர் அனோமா வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
ஷிரந்தி ராஜபக்ச மேற்கொண்ட பணிகளுக்காக வெளிநாடுகளில் இருந்து நிதியுதவிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் வெளிப்படை தன்மையுடன் அதனை மேற்கொண்டு வந்ததாகவும் வெலிவிட்ட குறிப்பிட்டுள்ளார்.
நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஷிரந்தி ஆஜராகவில்லை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்சவை இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அங்கு ஆஜராகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கால்டன் சிறிலியசவிய திட்டத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காகவே ஷிரந்தி ராஜபக்சவை ஆஜராகுமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்திருந்தது.
எனினும் அவரது ஆதரவாளர்கள் இன்று காலை முதல் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அருகில் ஷிரந்தி ராஜபக்சவிற்காக காத்துக்கொண்டிருந்து, பின்னர் கலைந்து சென்றுள்ளனர்.
ஷிரந்தி ராஜபக்ச வாக்குமூலம் வழங்குவதற்காக தனது கணவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பிரத்தியேக இடம் ஒன்றில் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகளை சந்திக்க புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரிடம் வங்கி பணமாற்றம் தொடர்பில் சுமார் 2 மணித்தியாலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ad

ad