புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2015

சுவிஸ் பாசல் மாநிலத்தில் நாகபாம்பொன்றின் பிரவேசம் மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது

சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் மண்டலத்திற்குட்பட்ட பள்ளி அருகே நாகப்பாம்பு சுற்றி திரிவதால், மாணவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுவிஸின் Pratteln நகரில் அமைந்துள்ள Rudolf Steiner என்ற பள்ளிக்கு அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை நாகப்பாம்பு நபர் ஒருவரை தாக்கியுள்ளது.
Spei என்ற அந்த நபரின் கண்ணில் அந்த நாகப்பாம்பு உமிழ்ந்ததால், அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பேசல் பொலிசாருக்கு இந்த தகவல் அளித்ததும், விலங்குகளை கட்டுப்படுத்தும் குழுவினருடன் வந்த பொலிசார் கடந்த சனிக்கிழமை முதல் பகுதி முழுவதும் நாகப்பாம்பை தேடி வருகின்றனர்.
வனப்பகுதிக்கு மிக அருகில் Rudolf Steiner பள்ளி உள்ளதால், மாணவர்கள் தகுந்த பாதுகாப்பு அல்லது பெற்றோர்களின் உதவி இல்லாமல் வெளியே வர வேண்டாம் என பள்ளி வளாகத்தில் எச்சரிக்கை பதாகையை பொலிசார் வைத்துள்ளனர்.
இது குறித்து பேசிய பள்ளியின் முதல்வரான Andreas Günther, கொடிய விஷமுடைய நாகப்பாம்பு இன்னும் பிடிபடாமல் இருப்பதால், அதை பற்றி மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்.
மேலும், பள்ளியின் முன்பக்கம் வழியாக தங்களின் பிள்ளைகளை எச்சரிக்கையுடன் அழைத்து வர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் தகவல்கள் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் Spei, மருத்துவ விடுப்பில் உள்ளார் என்றும் அவரது கண் பார்வையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், நாகப்பாம்பு குறித்து தகவல் அறிபவர்கள் உடனடியாக பேசல் பொலிசாரை தொடர்புகொள்ளுமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ad

ad