புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2015

வடக்கிலுள்ள மது விற்பனை நிலையங்களின் உரிமங்களை மீள்பரிசீலனை செய்க; வடக்கு அவையில் தீர்மானம்

news


வடக்கில் தற்போது அதிகரித்துள்ள மனித நேயமற்ற கலாச்சாரத்திற்கு மது மற்றும் போதைப்பொருள் பாவனை பிரதான காரணமாக உள்ளது. எனவே வடக்கில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மது விற்பனை நிலையங்களுக்கான உரிமத்தினை மீள்பரிசீலணை செய்ய வேண்டும் என்ற தீர்மானம்  வடக்கு மாகாண சபையில் நிறைவேறியது. 
 
வடக்கு மாகாண சபையின்  30 ஆவது மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்றது. அதன்போது அவைத்தலைவரால் குறித்த தீர்மானம்  சபையில் கொண்டுவரப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. 
 
மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
 
வடக்கில் அதிகரிக்கப்பட்டு வரும் வன் செயல்களுக்கு இங்கு இடம்பெறும் அதிகரித்த மதுபான விற்பனை மற்றும் போதைப்பொருள்  பாவனையே காரணம். 
 
அத்துடன் இங்கு தாராளமாக மதுபான விற்பனை , போதைப்பொருள் பாவனை காணப்படுகின்றன. அவை மது வரித்திணைக்களத்தின் வழிகாட்டல்களை மீறிய வகையில் உரிமங்களைப் பெற்றிருப்பதனைக் காணக்கூடியதாக உள்ளது. 
 
இவை அரசியல் செல்வாக்கு காரணமாகவும் மதுபான விற்பனை நிலையம் அதிகரித்த நிலமை வடக்கில் காணப்படுகின்றது. 
 
உரிய நடமுறையினையினைப் பின்பற்றாது வழிபாட்டு தலங்கள் , கல்விக்கூடங்கள், பொதுஅலுவலகங்கள், நிறுவனங்கள் போன்றவற்றை அண்மித்தாக பல மதுபான விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. 
 
 
இலங்கையில் யாழ்ப்பாணத்திலேயே மதுபானம் அதிகம்  விற்பனை ஆகின்றது என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
 
எனவே இதனைக் கட்டுப்படுத்தினால் பல வன்முறை சம்பவங்களை இல்லாது ஒழிக்க முடியும் என்ற தீர்மானம் தீவிரம்பெற்று வருகின்றது. 
 
இந்தநிலையில் முதலமைச்சரை அழைத்து கொழும்பிலும் போதைப் பொருள்  கட்டுப்பாடு குறித்த பேச்சு ஒன்று இடம்பெற்றுள்ளது. 
 
 
அதற்கமைய வடக்கில் ஏற்கனவே உரிமம் வழங்கப்பட்ட சகல மதுபான விற்பனை நிலையங்கள் நிர்ணயிக்கப்பட்ட நியமங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்டுள்ளதா என மீளாய்வு செய்ய வேண்டும். 
 
அதனடிப்படையில் முரணான உரிமங்களை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும். அத்துடன் எதிர்காலத்தில் மதுபான விற்பனை நிலையங்களுக்கு எவ்வித அனுமதியையும்  வழங்க வேண்டாம் என்றும் சபையில் தெரிவிக்கப்பட்டது.  
 
எனவே நிதி அமைச்சர், மது வரி ஆணையாளர் நாயகம், யாழ். மாவட்ட  உதவி மதுவரி ஆணையாளர் மற்றும்  யாழ். மாவட்ட அரச அதிபர் ஆகியோர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  சபையில் தீர்மானம்  ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது

ad

ad